அமெரிக்காவின் பொருளாதாரத் தடை – சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு!

61

பொருளாதாரத் தடைகளை நீக்கக் கோரி ஈரான் கொண்டு வந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்காவின் வழக்கறிஞர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளை கேட்டுக்கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்க கோரியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.

இதுகுறித்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது, அதில். அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் லட்சக்கணக்கான மக்களை கொல்கிறது என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 2018 ஆம் ஆண்டு நடந்த உடன்படிக்கையை அமெரிக்கா மீறுகிறது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இரு தரப்பு வாதங்களை இவ்வாரம் சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கிறது.

பொருளாதாரத் தடைகளை நீக்கக் கோரி ஈரான் கொண்டு வந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்காவின் வழக்கறிஞர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளை திங்கள்கிழமை கேட்டுக்கொண்டனர்.

வக்கீல் மாரிக் ஸ்ட்ரிங், 1955 ஆம் ஆண்டு இருதரப்பு உடன்படிக்கை, மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஒரு விஷயத்தை ஈரான் தவறாக அறிமுகப்படுத்தியுள்ளது, இது உலக நீதிமன்றம் என்று அழைக்கப்படும் சர்வதேச நீதிமன்றத்திற்கு (ஐ.சி.ஜே) செல்வதற்கான அடிப்படையாக தெஹ்ரான் குறிப்பிடுகிறது என கூறினார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து ‘‘அமெரிக்கத் தூதரைக் கொல்ல ஈரான் திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும் ’’என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.