தன் நாட்டில் பணியாற்றும் சீனர்களுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்க தொடங்கி , நேற்று டிரம்ப் அமெரிக்கர் அல்லாதோர்களை சம்பந்தபட்ட நாடுகளுக்கு அனுப்பும் திட்டம் உள்ளது என சொன்னதில் இருந்து காட்சிகள் மாறுகின்றன
ட்ரம்பின் அறிவிப்பு சீனாவுக்கு எதிரானது என்பதை உணர்ந்த சீனா தன் ஆதரவு ஏடுகள் மூலம் சில விஷயங்களை பரவவிடுகின்றது
அதாவது கொரோனா என்பதன் ஆய்வுக்கு அமெரிக்கா மில்லியன் டாலர்களில் பணம் கொடுத்ததாகவும், அதை வைத்து சீனா பெரும் சோதனைகளை செய்ததாகவும், அப்படி சோதனை செய்யபட்ட வவ்வால், பன்றிகள் போன்றவற்றை ஆய்வகங்களில் இருந்து சந்தைக்கு அனுப்பி அங்கிருந்தே கொரோனா மக்களிடம் பரவ ஆரம்பித்தது என சொல்லிவிட்டது
ஆய்வகங்களில் இருந்து தப்பிய அல்லது உணவுக்கு அனுப்பபட்ட வவ்வாவோ பன்றியோதான் இதை பரப்பிவிட்டது, ஆனால் ஆய்வுக்கு பணம் கொடுத்தது அமெரிக்கா என்கின்றது செய்தி
இதை கேட்டு ஆடிபோன அமெரிக்கா அதெல்லாம் சார்ஸ், பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க 2015க்கு முன்பே கொடுக்கபட்ட நிதி என சொல்லிகொண்டிருக்கின்றது
ஆக சீனா எதையோ ஆத்திரத்தில் மெல்ல லீக் செய்கின்றது, விஷயம் என்னாகும் என பொறுத்திருந்து பார்க்கலாம்
Stanely Rajan