உயர் எச்சரிக்கை மண்டலங்களாக அறிவிக்கப்படவுள்ள பிரான்ஸின் முக்கிய நகரங்கள்…

197

பிரான்சின் ஐந்து நகரங்கள் இன்று (08/10/2020) மாலை உயர் எச்சரிக்கை மண்டலங்களாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதார அமைச்சர் Olivier Véran இன்று 08/10/2020 வியாழக்கிழமை ஊடக சந்திப்பில் இதனை அறிவிப்பார் தெரிவிக்கப்படுகின்றது

Lyon, Lille, Saint-Etienne, Grenoble மற்றும் Toulouse ஆகிய ஐந்து நகரங்களில் 1,00,000 பேரில் 250 பேருக்கு கொரோனா என அதிகமான நோய்த்தொற்று விகிதங்களைக் கொண்டுள்ளன.

Marseille மற்றும் பாரிஸில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளதைப் போலவே, குறிப்பாக வயதானவர்களிடையே கொரோனா பரவுவதை எதிர்ப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அவசியம் என்று நேற்றிரவு 07/10/2020 ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

பாரிஸ் மற்றும் Marseille ஏற்கனவே உயர் எச்சரிக்கையில் உள்ளன. இதன் விளைவாக பாரிஸில் உள்ள மது அருந்தகங்கள் இரண்டு வாரங்கள் மூட வேண்டும் மற்றும் உணவகங்களை திறக்க புதிய சுகாதார நெறிமுறைகளை அமைக்க வேண்டும் என அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.