வாழ்த்துக்கள் பல…

209

தமிழீழ தேசியத் தலைவரின் 36 வது திருமண நாள் மற்றும் ஈழக்குழந்தை நம்ம வீட்டு இளவரசன் பாலச்சந்திரனின் 24 வது பிறந்த நாள் இன்றாகும்.

36 வது திருமண வாழ்வில் கலந்து கொண்டிருக்கும் அண்ணன் அண்ணிக்கு வாழ்த்த வயது இல்லாட்டியும் வாழ்க வாழ்க என வாழ்த்துறோம்.பார் போற்றும் வீரத் திருமகனே! தமிழன் விடிவுக்காய் வந்துதித்த மாணிக்கமே! இல்லற வாழ்வில் நீ இணைந்தாலும் எமது விடிவுக்காய் வாழ்பவனே!

அண்ணா எங்களுக்காக போராட்டத்தில் உன் தோளோடு தோள் கொடுத்து எமக்காக வாழும் தாயகத்தின் பெண்களுக்குள் முதல்மையான எம் அண்ணியே! வேருன்றிக் கிளை பரப்பி பூத்துக் காய்த்து விண்ணுயர்ந்து நிழல் பரப்பும் விருட்சம் போல வாழ்வீர்கள் என வாழ்த்துகிறோம்.

இன்று ஈழக்குழந்தை தம்பி பாலச்சந்திரனின் 24 வது பிறந்த நாள்.
———————————உலகத்தில் இன்று வரை எங்கேயும் ஆணுக்கு பெண் சமம் என்பதை சொல்லளவில் கூட ஏற்றுக்கொண்டது கிடையாது ஆனால் தமிழீழத்தில் சகலதுறைகளிலும் ஆணுக்கு பெண் சமம் என்று நிருவிக் கட்டியவன் எங்கள் அண்ணன் அத்துடன் நிற்கிறது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் தனது பிள்ளைகளின் பெயருக்கு முன்பாக தந்தையின் மற்றும் தாயின் பெயர் முதல் எழுத்துக்களை போட்டு (தம்பி பாலச்சந்திரனின் பிறந்த நாள் விழாவில் பொறிக்கப்பட்டு உள்ள பெயரை பாருங்கள் புரியும்) பெண்ணின் பெருமையையும் ஆண் பெண் சமத்துவத்தையும் நிலை நாட்டியவன் எங்கள் போன்று உலகில் வேறெவரும் உண்டா..?

-ஈழம் ரஞ்சன்-