இப்போதுகூட இவர்களின் தர்க்கத்தில் நேர்மை இல்லை. முதலில் கேவலமாக TTK எல்லாம் இருக்கும் போது எங்கள் தலைவரைப் போயி ஊழலின் தந்தை என்கிறீர்களே என்று கெஞ்சுகிறார்கள்.
மறுபக்கம், மிகப்பெரிய உண்மையை, பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல மறைக்க பார்க்கிறார்கள்.
அது யாதெனில் இந்தியாவின் முதல் ஊழல் குற்றவாளியான இந்த TT கிருஷ்ணமாச்சாரியை பாராளுமன்றத்திற்கு அனுப்பியதே வடுக தந்தை ஈவெராதான்.
அது ஒரு கொடும் நிகழ்வு.
சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் அண்ணல் அம்பேத்கரின் நெருங்கிய நண்பர். அண்ணல் சென்னை வரும்போதெல்லாம் அவரின் மொழிபெயர்ப்பாளர் பாலசுப்ரமணியம் தான்.
சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் ஈவெராவுக்கும் நண்பர்தான்.
1957 தேர்தலில் சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் சென்னையில் தேர்தலில் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து பிராமண வெறியரும், அதற்கு முன்பே பல ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவருமான TT கிருஷ்ணமாச்சாரி போட்டியிட்டார்.
நீதிக்கட்சியில் இருந்த வெகு சொற்ப தமிழர்களில் சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் ஒருவராக இருந்த போதும் அவரை திட்டவட்டமாக ஆதரிக்க முடியாது என்று அறிவித்தார் ஈவெரா.
எத்தனையோ முறை பாலசுப்ரமணியம் மன்றாடியும், அதை மறுத்து பிராமணர் TTK ‘விற்கு சென்னையில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார் ஈவெரா.
பிரச்சாரத்தின் போது சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் மீது திராவிட இயக்கத்தினர் பல இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள்.
அத்தோடு மட்டுமல்லாது, பாலசுப்ரமணியம் தோற்று TTK வென்றதும்
குடியரசு, விடுதலை போன்ற தங்கள் ஊடகங்கள் வாயிலாக பாலசுப்ரமணியம் தற்கொலை செய்து கொண்டார் என்றெல்லாம் வதந்திகளை பரப்பினார்கள்.
1957 ‘இல் வடுக தந்தை ஈவெராவால் வெற்றி பெற வைக்கப்பட்ட TT கிருஷ்ணமாச்சாரி அடுத்த ஆண்டே 1958 இல் ஊழல் நிரூபணமாகி பதவி விலக்கப்பட்டார்.
சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியத்தின் மீது ஈவெரா வன்மத்துடன் செயல்பட்டதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்க முடியும்.
ஒன்று, தெலுங்கு நீதிக்கட்சியும், தெலுங்கு காங்கிரசும் போட்டியிட்ட தேர்தலில் நின்ற ஒரே தமிழர் அவர்.
இரண்டாவது முக்கிய காரணம்..
சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம்தான் முதன் முதலாக அண்ணல் அம்பேத்கார் அவர்களின் பேட்டி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அது பிராமணர்களுக்கும் நீதிக்கட்சி திராவிடர்களுக்கும் சித்தாந்த முறையில் எந்த வேறுபாடும் இல்லை.
பூணூல், ஜரிகை தலைப்பாகை எல்லாம் அணிந்துகொண்டு பிரமாணர்களின் சமூக நிலையை எட்டுவதே திராவிடர்களின் நோக்கமாக இருக்கிறது.
எல்லோருக்கும் சமூக நீதி அவர்களின் நோக்கமில்லை என தெரிவித்திருந்தார்.
அண்ணலின் மிகச்சரியான கணிப்பு-இன்றுவரை எதார்த்தம். கதை அத்தோடு முடிந்து விடவில்லை.
1974 இல் TT கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார் இறந்தபோது, மிகவும் influential பிராமணராக இருந்த அவர் பெயரில் ஆழ்வார்பேட்டையில் ஒரு தெருவை TTK தெரு என்று பெயரியட்டவர் பின்னால் உலக ஊழல் தந்தையாக மாறிய கருணாநிதி.
ஆக, இந்த பதிவின் சம்மரியும், take home message ‘ம் இதுதான்:
அதாவது, வடுக திராவிடர்களின் தொடர்பில்லாமல் எங்கேயாவது ஊழலும், அயோக்கியத்தனமும் அரங்கேற இயலுமா?
நன்றி Krishna