வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு நாளில் பிரித்தானியாவில் நடைபெற்ற கவனயீர்ப்பு

86

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவுநாளில் பிரித்தானியாவில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கைப்போரில் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் 2009 . இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு(ITJP)மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு(HRDAG) ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவருகின்றன.
இந்நிலையிலேயே, வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச நாளை நினைவுகூரும் வகையிலும் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிவடக்கு கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கிலும் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கம் – பிரித்தானியா( Association of Exiled Relatives of the Enforced Disappeared in Sri Lanka -U.K) என்ற அமைப்பும் பிரித்தானியாவில் புலம்பெயர் அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்திருந்தன.

(Trafalgar Square) நேற்றைய தினம் நடத்திய மாபெரும் போராட்டத்தில் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல்த்திட்டம் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. மேற்படி கணக்கெடுக்கும் பணியில் செயற்பாட்டாளர்களான அனுஷன் பாலசுப்பிரமணியம், பபிஷன் போல்ராஜ், சுபதர்ஷா வரதராசா,
பிரசாந் இராசரத்தினம்,சுபமகீஷா வரதராசா, கஜானன் செல்வராசா,எபினைசர் கணேசலிங்கம், பிரகலாதன் சிவகுருநாதன், ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரிடமிருந்து யுத்தத்தினால் இறந்த அவர்களின் உறவுகளின் பெயர் விபரங்களை சேகரித்தனர்.
இந்நிலையில் மேற்படி செயற்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த செயற்பாட்டாளர்கள்இலங்கையில் இடைக்கால நீதிப்பொறிமுறை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பவற்றிற்கு மிகவும் அத்தியவசியமாக இந்த பணிஇருக்கின்றமையால் மிகுந்த ஆர்வத்துடன் இந்த பணியில் முன்வந்து ஈடுபடுவதுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குரலுக்கு நாமும்வலுச்சேர்க்கின்றோம் என தெரிவித்தனர்.