நான் வீட்டுக்கு ஓட்டுப் போடிருப்பேன்
கூட்டமைப்பை ஏற்றிருப்பேன்
கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் துயரில் பங்கெடுத்து புது டில்லி போய் மன்மோகன் சிங்கோடு பேசி யுத்தத்தை நிறுத்த உண்ணாவிரதம் இருந்திருந்தால் நான் கூட்டமைப்பை ஏற்றிருப்பேன்
முள்ளிவாய்க்கால் நேரத்தில் பாராளுமன்றில் ஏதேனும் தமிழருக்காய் செய்திருந்தால் கூட்டமைப்பை ஏற்றிருப்பேன்
முள்ளிவாய்கால் அவல நேரத்தில் தமது பதவிகளை கூட்டாக துறந்து அரசியல் தியாகம் செய்திருந்தால் நான் கூட்டமைப்பை ஏற்றிருப்பேன்

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தமிழர் தலைவனை ஏற்றிருந்தால்,கூட்டமைப்பை தலைவரே ஏற்படுத்தியதை ஏற்றிருந்தால் நான் கூட்டமைப்பை ஏற்றிருப்பேன்
தவிபு அழிக்கப்பட்டதற்கு நன்றி சொல்லி பாராளுமன்றில் பேசாமல் விட்டிருந்தால் நான் கூட்டமைப்பை ஏற்றிருப்பேன்
நல்லாட்சி அரசில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காய் நீதிமன்ற வாசல் ஏறியிருந்தால் நான் கூட்டமைப்பை ஏற்றிருப்பேன்.
பெரும்பான்மைக்கட்சி நலனுக்காய் நீதிமன்ற வாசல் படி ஏறாமல் விட்டிருந்தால்
நான் கூட்டமைப்பை ஏற்றிருப்பேன்.
யுத்தம் நிறைவுற்ற பத்தாண்டில் காணாமல் ஆக்கப்பட்டோர்,மாவீரர் குடும்ப ஏழ்மை,வன்னியில் உள்ள காணிப்பிரச்சினை போன்ற ஏதாவதற்கு தீர்வு கண்டிருந்தால் நான் கூட்டமைப்பை ஏற்றிருப்பேன்.
நடந்து முடிந்த போரின் புனிதத்தை சுமோ பழிக்காது விட்டிருந்தால் நான் கூட்டமைப்பை. ஏற்றிருப்பேன்…
கூட்டமைப்பு எம்பிக்கள் அரசின் வரப்பிரசாதங்களை ஏற்காது விட்டிருந்தால் நான் வீட்டை ஏற்றிருப்பேன்.
நல்ல தூரநோக்கு இன விடுதலையை சிந்திக்கின்ற தலவனாக சம்பு இருந்திருந்தால் நான் கூட்டமைப்பை ஏற்றிருப்பேன்..
கண்டது என்னவோ ஏமாற்றம் தான்…ஓரு வித பிரச்சினைகளும் தீரவில்லை…அடுத்த பத்து வருடங்களும் ஒத்தோடும் அரசியல் தேவை…நிலையான அபிவிருத்தி தேவை…மக்களும் அரசியலின் அங்கமே…எனவே ஆளுமை நிறைந்த சந்திரகுமாரை ஆதரித்து ஒரு சந்தர்ப்பம் வழங்குவோம்.
தமிழ் தேசத்தின் வாக்காளன் ஆகிய நான்! என வரிதிதாசன் வெற்றிவேல் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.