வெட்டு கிளிகள் அவ்வளவு மோசமானவையா?

50

வெட்டுக்கிளின்னா சும்மா பொட்டு வைச்சு பொங்கல் சாப்பிடுற சாதா பூச்சின்னு நினைச்சிறக் கூடாது.

முதல் உலகப்போர் காலத்தில் லெபனான் நாட்டின் மீது பறந்த வெட்டுக்கிளி கூட்டத்தால் ஒரு நாள் முழுக்க சூரிய ஒளி சுத்தமா அவுட். ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை’ம்பாங்க. ஆனா அங்கே வெட்டுக்கிளி கூட்டம் ஒரு நாட்டையே மூடி மறைச்சிருச்சு.

அடுத்ததா, 1889ல் செங்கடல் வழியா பறந்த வெட்டுக்கிளி கூட்டம், 22 ஆயிரம் சதுர மைல் பரப்பளவுக்குப் பறந்திருக்கு.

மணல்ல முட்டை விடுறதுதான் வெட்டுக்கிளி கூட்டத்தோட வழக்கம். 1881ஆம் ஆண்டுல சைப்பிரஸ் தீவில, 1,300 டன் வெட்டுக்கிளி முட்டைகளை மணலைக் கிளறி அழிச்சிருக்காங்க.

வழக்கமாக எகிப்து, எத்தியோப்பியா, யேமன், நாடுகள் அப்படியே கிட்டத்தட்ட பாகிஸ்தான் வரை பறந்து வந்து பெட்ரோல் தீர்ந்து போறதுதான் வெட்டுக்கிளி கூட்டத்தோட வழக்கம்.

எப்பவாச்சும் இந்தியா பக்கம் எட்டிப்பாக்கிற வெட்டுக்கிளி கூட்டம் இந்தமுறை முழுவேகத்தோட உள்ளே நுழைஞ்சிருக்கு. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பூந்ததால இது பாகிஸ்தான் சதின்னு இன்னும் யாரும் சொல்லல. (இனிமே சொன்னாலும் சொல்லுவாங்க).

அவனவன் வீட்டுக்கிளியா, கூட்டுக்கிளியா வேதனையில முடங்கிக் கிடக்கிற நேரத்துல இந்த வெட்டுக்கிளி தொல்லை வேறயா? அடச்சே.

நன்றி – மோகன ரூபன்