தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும் கன்னியுரையில் விக்னேஸ்வரன்!

105

தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்றில் வலியுறுத்தினார்.

புதிய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவை வாழ்த்தி உரையாற்ற கட்சிகளின் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்போதே விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.

“வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.ஒவ்வொரு செயலுக்கும் அதன் எதிர் எதிர்வினை இருக்கும்” என்று தெரிவித்த விக்னேஸ்வரன் “காலா கால தே பாலா பாலா டி” என்று சிங்கள மொழியில் குறிப்பிட்டார்.