வெளிவராத மாவீரத் தடம் கப்டன் இளம்தீ…!

109

கடற்புலி மாவீரர் கப்டன் இளம்தீ அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!

“தமிழீழ மண் விடுதலைக்காக தன்னை  முழு அர்ப்பணிப்போடு களமாடிய பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் வரிசையில் “இளம்தீ” என்கின்ற இவனும் ஒருவன்”

கப்டன்- இளம்தீ
(ஜேசுராசா எட்வின் ஜெயராஜ்)
          யாழ் மாவட்டம்
     வீரச்சாவு 05.09.2008

2007 ஆம் ஆண்டு எமது விடுதலைப் போராட்ட அமைப்பில் இணைந்த இளம்தீ
தமிழீழ விடுதலைப் புலிகளின் கனரக
ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இணைந்து அதில் தனக்கான பயிற்சி
பெற்று போராளிகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கிக்கொண்டிருந்த வேளையில் அம்முகாம் பொறுப்பாளரால் கடற்புலிகளின் சிறப்புத் தளபதிக்கு இவரைப்பற்றிய செயற்பாடுகள் தெரியப்படுத்தப்பட்டதால் சிறப்புத்தளபதியால் தனது மெய்பாதுகாப்புப்ணிக்கு உள்வாங்கப்படுகிறார்.

எமது போராட்டத்தில் திறமை,அர்ப்பணிப்பு அடிப்படையில் போராளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.அந்த அடிப்படையில்
அமைப்பில் இணைந்து  சிறிது
காலம் மிகச்சிறப்பாக கடமையாற்றிக்
கொண்டிருந்த  வேளையில் தன்னை சண்டைக்கு அனுப்பும்படி அடிக்கடி சிறப்புத்தளபதியிடம்
கேட்டுக் கொண்டதற்கு அமைவாக
இவர் தாக்குதலனிக்கு மாற்றப்படுகிறார்.

கடற்புலிகளின் தரைத்தாக்குதலணியின் அநேகமான
 சமர்க்களங்களில் அதாவது எம்மால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலாகினும் சரி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புச் சமராகிலும் சரி பங்குபற்றியவன். .இவனது தனித்திறமையால் பொறுப்பாளர்களாலும் தளபதிகளாலும் பாராட்டப்பட்டான்.
05.09.2008.அன்று மன்னாரில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட
பாரிய இராணுவ நடவடிக்கைக்கு எதிராக இறுதிவரை போராடி தமிழீழ மண்ணை முத்தமிடுகிறான்.குறுகிய
காலம் தான் இயக்கத்தில் என்றாலும்
அக்காலப்பகுதியில்  எவ்வளவு சாதிக்கமுடியுமே அவ்வளவுக்குஅவ்வளவு சாதித்துக் காட்டிய ஒருபெரும் வீரனாவான்.

இவனது இறப்பு சாதாரணமானது அல்ல தமிழின உரிமைக்கான புனிதப் போரின் அழியாத வீரசரித்திரம்.இந்த மகத்தான மாவீரனுக்கு எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

வரலாற்றுப்பதிவிற்காக “ராஜ் ஈழம்”

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”