விடுமுறைக்குச் சென்ற மக்ரோன் தம்பதியினர்!

62

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது விடுமுறையை கழிக்க தீவு ஒன்றுக்கு பயணமாகியுள்ளார்.

Bormes-les-Mimosas (Var) நகரில் உள்ள Fort Brégançon தீவுக்கு மக்ரோன் பயணமாகியுள்ளார். அவரின் மனைவி பிரிஜித் மக்ரோனும் பயணமாகியுள்ளார். அவர்கள் வியாழக்கிழமை மாலை இங்கு வந்தடைந்துள்ளனர். Christmas Eve கொண்டாட்டத்தை இங்கு வைத்தே கொண்டாடியுள்ளனர்.

Hyères விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்கள், அங்கிருந்து Fort Brégançon தீவுக்கு அரச வாகனம் மூலம் பயணித்துள்ளனர்.

அவர்கள் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அங்கு ஓய்வெடுப்பார்கள் என அறிய முடிகிறது.

*பிரெஞ்சு ஜனாதிபதிகள் ஓய்வெடுக்கும் இந்த தீவுக்கு ஜனாதிபதி மக்ரோன் வருடம் தோறும் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.