தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை பிரித்தானியாவில் நீக்கப்பட்டது!!
அக்டோபர் 21, 2020
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்த தடையை நீக்கி பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தே இந்த தீர்ப்பு உறுதிசெய்யப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட பிரிட்டனின் தடை உத்தரவுக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு கோரிக்கை அடங்கிய மனுவை சமர்ப்பித்த போது பிரித்தானியா உள்துறை செயலாளர் அதை ஏற்கவில்லை .அதனால் லண்டனில் இருக்கும் மேட்ரிக்ஸ் சேம்பர்ஸின் பேராசிரியர் கோனார் ஜியார்டி மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (எல்எஸ்இ) வழியாக தடைக்கு சட்டரீதியான சவாலுக்கு உட்படுத்தும் நோக்கில் வழக்கு தாக்கல் செய்திருந்தது இது சிறப்பாக அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன தீர்ப்பாயத்தின் முன் விசாரிக்கப்படும். மேல்முறையீட்டு ஆணையம் (POAC).இதை நாடுகடந்த அரசாங்கத்தினை சட்ட ரீதியாக அமைக்கும் நோக்கம் கொண்டது அல்ல மாறாக மக்கள் பயமில்லாமல் கூட்டங்களில் கலந்து கொள்ளவேண்டும் என்கிற நோக்கத்துக்காகவே என்று வாதிட்டார்கள் மேலும்
“கடந்த 10 ஆண்டுகளில் LTTE யால் எந்த வன்முறை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. LTTE யை தடைசெய்வது என்பது நடைமுறையில் அனைத்து தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகளையும் தகர்த்துவிடுகிறது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன .ஆனால் உள்துறை அமைச்சு தடை நீக்கத்துக்கு எதிராக மறுத்துள்ள கடிதத்தில் ஒரே ஒரு சம்பவத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தது . அது 2018 இல் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவமாகும் . அது புலிகள் செய்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் வாதிட்டார்கள். LTTE மீதான தடையை நீக்க உள்துறை அலுவலகத்தை வழிநடத்தும் அதிகாரம் POAC க்கு உள்ளது என்றும் வாதிட்டு இருந்தார்கள் . விடுதலை புலிகள் அமைப்பு மார்ச் 2001 இல் பிரிட்டனில் தடைசெய்யப்பட்டது, அது “இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனி தமிழ் அரசுக்காக போராடும் பயங்கரவாத குழு” என்று வகைப்படுத்தப்பட்டது. ஒரு குழுவின் தடை அதை ஒரு செய்கிறது. இங்கிலாந்துஅரசாங்கம் பல ஆதாரங்களை இரகசியமாகக் பெற்றே இதை செய்திருக்கிறது என்றும் வாதிட்டார்கள் இந்த வழக்கு சென்றவருடம் நடந்தது. அந்தவகையில் இன்று நடந்த வழக்கின் போது உள்துறை அமைச்சு தனது எதிர்ப்பை வாபஸ் வாங்கியது. அதனால் விடுதலை புலிகள் மீதான தடை விலகியது.
Sajee.k