
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டநடவடிக்கையின் அடுத்தபடிகற்களாக February 18ம் திகதி உள்துறை அமைச்சுக்கு 90 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்ய பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அதற்கான செயல்முனைப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்மடல் ஊடாகhttp://www.lifttheban.uk எனும் இணையவழி கையெழுத்து போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய, நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழர்களாகிய நாம் பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க, பெரியளவில் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும்.