பகுதி 2 : வியட்நாம்
தென்கொரியா , ஹொங் கொங் , தாய்வான் , நியூஸிலாந்து போன்ற பல நாடுகள் தங்களிடம் இருந்த Sophisticated Health System மூலம் Covid 19 ஐ வெற்றி கொள்ள வியட்நாம் வரையறுக்கப்பட்ட மருத்தவ வளங்களுடன் சக்திமிக்க தகவல் தொழில்நுட்ப வளங்களை (Data Technology) ஒருங்கிணைத்து Covid 19 சவாலை நேர்த்தியாக எதிர் கொண்டு வெற்றி பெற்று இருக்கிறது . 95 million சனத்தொகையை கொண்ட இந்த நாட்டில் 257 பேர் மட்டுமே Covid 19 ஆல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் . ஆனால் இதுவரை எந்தவொரு இறப்பும் பதிவாகவில்லை .
வியட்நாம் வடக்கே சீனாவுடன் 1,100 KM எல்லைகளை பகிர்ந்து கொள்ளுகிறது . அதே நேரம் Covid 19 ஆள் கணிசமாக பாதிக்கப்பட்ட தாய்லாந்து , இந்தோனேசியா ,மலேசியா போன்ற நாடுகளுடன் மற்றைய எல்லைகளை பகிர்ந்து கொள்ளுகிறது.அத்தோடு 18 million இற்கு அதிகமான சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வியட்நாம் நோக்கி பயணம் செய்கிறார்கள். சர்வதேச ரீதியாக புகழ் பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் (NIKE, SAMSUNG, IBM, INTEL, Fujitsu மற்றும் HP) பரந்த அளவில் வியட்நாமில் இருந்து தொழில்படுகின்றன.இவ்வாறு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளுடன் நெருங்கி வியட்நாம் செயல்படுகிறது
மறுபுறம் வியட்நாம் மருத்துவ துறை வரையறுக்கப்பட்ட வளங்களையே தன்னகத்தே கொண்டு இருக்கிறது . 8 மில்லியன் மக்களைக் கொண்ட பெரும் நகரங்களின் ஒன்றான Ho Chi Minh இல் 900 intensive care beds மட்டுமே உள்ளன .இந்த நாட்டில் 10,000 மக்களுக்கு 8 வைத்தியர்கள் மட்டுமே கடமையில் இருக்கிறார்கள்
ஆனால் Covid 19 இற்கு எதிரான வெற்றியை வியட்னாம் சாத்தியப்படுத்தியது எப்படி ?
வியட்நாம் Codvi 19 ஐ வெற்றி கொண்ட “its war against COVID-19” என்கிற Model ஒன்றை அறிமுகம் செய்து இருந்தார்கள் . இதன் கீழ் மருத்துவ , அரச அதிகாரிகளை ஒருங்கிணைத்தல் (Mobilisation of Medical and Civil personnel), பொதுமக்களை கண்காணித்தல் (Surveillance and Intrusion), தகவல் திரட்டு வலையமைப்பு (State’s network of informants) ஆகிய மூன்று விடயங்களை அடிப்படையாக கொண்டு இலக்குகளை நிர்ணயித்தார்கள் என World Economic Forum அறிகையிட்டு இருக்கிறது.
Every business, every citizen, every residential area must be a fortress to prevent the epidemic என மிக ஆரம்ப நிலையிலேயே வியட்நாம் தனது மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. இதனடிப்படையில் பொதுமக்களை தெளிவு படுத்தும் வகையில் அரச ஊடகங்கள் ஊடக massive information campaign ஒழுங்கு செய்யப்பட்டது . குறிப்பாக சுகாதார அமைச்சு YouTube ஊடக செய்த proper hand-washing Video உலக அளவில் viral ஆனது.
- Mass testing மூலம் தொற்று நோய் பரவலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த முடியும் என்பதை தென் கொரியா போன்ற நாடுகள் நிரூபிக்க வியட்நாம் அறிமுகப்படுத்திய “its war against COVID-19” என்கிற Model இன் கீழ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கும் அவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாம் கை தொடர்புகளை கண்டுபிடிப்பதற்கும் வியட்நாம் அதிக கவனம் செலுத்தி இருந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் , சிவில் அதிகாரிகள் ஆகியோரை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து Covid 19 ஆள் பாதிக்கபட்டவர்களை , சந்தேகத்திற்கு உரியவர்களை அடையாளம் கண்டது.
- இதற்காக வியட்நாம் நாட்டின் சுகாதார அமைச்சகம் வியட்நாம் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து ஒரு ஆன்லைன் அறிக்கையிடல் முறையை (Online Reporting) உருவாக்கி பாதிக்கப்பட்டவர்கள் , சந்தேகத்திற்கு உரியவர்கள் , அவர்களுடன் தொடர்பு உரியவர்கள் என சகலரையும் உள்ளடக்கிய Database ஒன்றை அறிமுகப்படுத்தியது
- அத்தோடு வியட்நாமின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் NCOVI என்கிற APP ஒன்றை அறிமுகம் செய்து நாளாந்தம் பொதுமக்கள் தங்களுடைய தேகநலன்கள் குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கையிட ஏற்பாடு செய்து இருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ ரீதியாக 200,000 Test Kits ஐ தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்த வியட்நாம் மேலதிக தேவைகளை தனது சொந்த உற்பத்தி மூலம் தீர்த்து கொண்டது .
- மறுபுறம் நாட்டின் பொருளாதார ரீதியான இழப்புகளை ஈடு செய்வதற்காக $1.1 billion பெறுமதியான நிவாரண Package ஐ முன்வைத்து இருக்கிறது
2002-2018 காலப்பகுதியில் 45 மில்லியன் மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்ட வியட்நாம் தனது சக்தி மிக்க தொழில்நுட்ப வளங்களை ஒருங்கிணைத்து Covid 19 கொடூரத்தில் இருந்து தனது மக்களை காப்பாற்றி உலக வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறது
– shaila