மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜை பற்றி பேசிய தளபதி விஜய்,சூட்டிங்கில் சீன் பேப்பர் எதுவுமில்லாமல் முதல் இரு நாட்கள் வந்தார் என்றும்,இதனால் எப்படிதா இவருடன் இன்னும் 90 நாட்கள் இணைந்து வேலை செய்ய போறானோ என்று தனக்குள் எண்ணிக்கொண்டதாகவும் வெளிப்படையாக பேசியிருந்தார்.இதை கேட்டு நெகிழ்ந்த மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,உடனே எழுந்து நின்ற போது… “ஓவராய் பண்ணாம உக்காரு” என்று கூலாக மேடையில் அவரை விஜய் கலாய்த்தார்.அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.