விகாஸ் துபே கொலை – கடமையை செய்ய தவறிய அரசு

68


ஒரு ரோட்ல ஒரு கைதிய கைது பன்னிட்டு போகிட்டு இருக்கப்ப போலிஸ் ஜீப் பஞ்சர் ஆகுது. இதனால ஜீப்ப நிறுத்தி டயர் மாத்திட்டு இருக்காங்க. அப்பனு பாத்து அந்த கைதி தப்பிச்சு போயிடறான். உடனே அவன அங்க இருந்த போலீஸ் encounter பன்றாங்க..

இது எங்கயோ கேள்விபட்ட கதை மாதிரி இருக்குல. இதே தான் தமிழ் சினிமாவில இருந்து நாடகம் வரைக்கும் வர கதை.

இந்த கதையவே உண்மை சம்பவமாக்கி ஒரு world record பன்னிருக்காங்க உத்திரபிரதேச போலிஸ்.

உத்திரபிரதேசத்தில் ஒரு Most Wanted Criminal list எடுத்தோம்னா, அதுல விகாஸ் துபே பேரு கண்டிப்பா இருக்கும். Murder, கடத்தல் னு இவரு பேருல கிட்டத்தட்ட 60 case க்கு மேல இருக்கு.

2001 ஆம் ஆண்டு உத்திரபிரதேச அமைச்சராக இருந்த Santosh Shukla என்பவர் கொல்லபடுறாரு. அதுல முக்கிய குற்றவாளியா விகாஸ் துபேவ அறிவிக்கறாங்க UP போலிஸ்.

ஆனா இதுல வருத்தம் என்னனா, இந்த சம்பவம் நடந்ததே ஒரு போலிஸ் ஸேடஷன்ல. அந்த ஸ்டேஷன்ல அன்னைக்கு 15 பேரு இருக்காங்க. அந்த 15 பேருமே அமைச்சர் சந்தோஷ் சுக்லா மரணத்துக்கு சாட்சி ( Eye – witness).

அப்போ ஆட்சியிலிருந்ததும் பாஜக அரசு, விகாஸ் துபேவும் பாஜக வில் ஒரு பெரும்புள்ளி.

15 பேரு போலிஸ் சுத்தி இருக்கும் போதும், ஒரு அமைச்சர சுட்டு கொல பன்னியும் விகாஸ் துபே எப்படி தப்பித்தாருனு இப்ப எல்லாருக்குமே புரிஞ்சிருக்கும்.

அதுக்கப்புறம் விகாஸ் துபேவை வலைவீசி தேடிய போலீஸார் ஒரு வழியாக 19 வருசத்துக்கு அப்றம் கைது பன்னிட்டு போற வழியில விகாஸ் துபே தப்பிக்க பாத்துருக்காரு… போலிஸ் சுட்டு கொண்ணுட்டாங்க..

இதை பார்த்த audience என்ன பன்னுவாங்க?

Sorry மக்கள் என்ன பன்னுவாங்க?

அந்த போலிஸ தூக்கி வச்சு கொண்டாடுவாங்க. அதே தான் இப்ப UP ல நடந்துட்டு இருக்கு.

சினிமா ல கூட இந்த காட்சிய வச்சா நம்பமாட்டோம். ஆனா இதயே ஒரு சாட்சிய வச்சு போலிஸார் கொலை பன்னிருக்காங்க.

Sorry sorry, என்கவுண்டர் பன்னிருக்காங்க.

சரி UP ய விடுவோம்.

இதே மாதிரி சம்பவம் போன வருடம் ஆந்திரால நடந்தது. அப்பவும் இதே மாதிரி தான் போலிஸ நாம தூக்கிவச்சிட்டு கொண்டாடினோம்.

இதே சாத்தான்குளத்துல நடக்கும் போது மட்டும் ஏன் அவங்க மேல வெறுப்பை காட்றோம்.

ஏன்னு நா சொல்லட்டா…

சாத்தான்குளம் சம்பவத்தில் இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருமே innocent கள். அதாவது தப்பு செயயாதவங்க.

இதே போல 2018 ல ஒரு Apple showroom வச்சிருக்க ஒருத்தர arrest பன்னி encounter பன்றாங்க. பின்னால அவரு எந்த தப்பும் பன்னல நல்லவருனு தீர்ப்பு வருது..

கிட்டத்தட்ட 800 க்கும் மேல போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்திருக்கு உத்திரபிரதேசத்தில மட்டும்.


நம்ம நாட்டோட 3 தூண்கள் னு அரசியலமைப்பு சாசனத்தில ஒன்னு குறிப்பிட்டிருப்பாங்க.

அத 3 Pillars of Indian Constitution னு சொல்வோம்.

1. Legislative
2. Executive
3. Judiciary

வெறும் 2 தூண்களை வைத்து மட்டுமே ஒரு building எழுப்பிவிட முடியாது. குறைந்தபட்சம் 3 தூண்களாவது வேணும்.

அதே போல தான் இந்த மூனு தூண்களும்.

இதுல போலிஸே யார்கிட்டயும் கேக்காம, கோர்ட்டில தீர்ப்பு வராம, என்கவுண்டர் பன்னிட்டாங்கனா, எதுக்கு Court அதுக்கு 10 வக்கீல், அதுக்கு ஒரு Judge ?

எதுக்கு Judiciary?

வெறும் Executive & Legislative மட்டும் வச்சுகோங்களே..

சரி வச்சிருக்க Judiciary ஒழுங்கா வச்சிருக்காங்களானு பாத்தா அதுவும் இல்ல..

கிட்டத்தட்ட 3 வருடமா 40 % க்கும் மேல் Vaccany கள் நிரப்பபடாம உள்ளது.

போலிஸ் குற்றவாளிய கோர்ட்க்கு அழைச்சிட்டு போறத விடுவோம்.

2012 ல நடந்த நிர்பயா கொலை வழக்கிற்கு 8 வருடம் கழித்து தீர்ப்பு கிடைக்கிது.

இப்படி இருக்கும்பட்சத்தில் ஒரு சாமானியன் கோர்ட் வாசலை எப்படி நாடுவான்?

2014 ல election ல தேர்தல் அறிக்கையில் கோர்ட் இல்லாத நகரங்களில் Fast track court னு ஒன்னு அமைப்பதாய் மோடி வாக்குறுதி கொடுத்தாரு. பேருலா நல்லா தான் இருக்கு, ஆனா court இன்னும் வரலியே…

A Justice delayed is a Justice denied னு சொல்வாங்க…

அதே தான் இங்க 50 ல 1 கேஸுக்கு நிகழ்ந்துட்டு வருது. இத நான் சொல்லல CSDS ( Centre for the study of developing societies) ல நடத்தின ஆய்வறிக்கையில சொல்றாங்க.

இந்த இடத்தில விகாஸ் துபே கெட்டவனாகவே இருந்தாலும்..


போலிஸ் ஒரு குற்றவாளிய கொன்னது சரியானதாகவே இருந்தாலும்,


கடமையை செய்ய வேண்டிய அரசு தான் தன் கடமைய செய்யாம, சட்டஒழுங்கை பராமரிக்காம, ஒரு சில மாபியாக்களுக்கும், ஒரு சில பண முதலாளிகளுக்கும் சார்ந்து இயங்கிட்டு வருது என்பதயே இந்த நீள பதிவின் மூலம் புரியவைக்க முற்படுகிறேன்.


நன்றி🙏