உண்மையை உரக்க சொல்ல நான் ஏன் அஞ்சவேண்டும் – விக்னேஸ்வரன்!

106

உண்மையை உரக்க கூற நான் ஏன் அஞ்சவேண்டும் எனவும் சொல்லியடித்திருக்கிறார் சி.வி.விக்கினேஸ்வரன்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் சொல்லியடித்துள்ள சி.வி 80 வயதான நான் இன்றோ நாளையோ சாவை எதிர்பார்த்திருப்பவன். அதனால் மரணம் எனக்கு பொருட்டு இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் யுத்த சூனிய வலயம் என அறிவித்துவிட்டு , குண்டுகள் போட்டு கொன்றொழிக்கப்பட்டது அப்பாவி தமிழ் பொதுமக்களே. அதனாலேயே அங்கு சத்திய பிரமாணம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கயனது வெற்றி பற்றிய கேள்விக்கு எனது வாக்குகளுக்காக நான் பணமோ ,சாராயமோ யாருக்கும் கொடுக்கவில்லை. அபிவிருத்தி வேண்டும் என்பதற்காக , தமிழரின் அரசியற் பிரச்சனையை புறந்தள்ள முடியாது எனவும் சிதறடித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்.