மாவை சேனாதிராஜா மேற்கொண்டுள்ள வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் அடுத்தவாரம் முன்னெடுக்கவிருக்கும் போராட்டத்துக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிர்வினையாற்றுதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மாவை. சேனாதிராஜா மற்றும் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்திலேயே விக்னேஸ்வரன் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அனுப்பிய கடிதத்தில் தமிழ் மக்கள் பேரவையில் தமிழரசுக் கட்சியும் இணைந்து அரசியல் சாராத பலமான மக்கள் இயக்கம் ஒன்றைக் கட்டி எழுப்ப முன்வரவேண்டும் என்று மாவையிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.