யாழில் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீட்டை நொருக்கிய கும்பல்!
யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாத நபர்களினால் நேற்று(6)இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரனைகள் ஆரம்பித்துள்ளானர்.
யாழில் அங்காங்கே இலக்கின்றி அலையும் இளைஞர் குழுக்களின் அடாவடி நாளுக்குநாள் அதிகரித்துள்ளது.ஆங்காங்கே நடக்கும் சமூக விரோத செயல்கள்,தனிநபர்களுக்கு எதிரான குற்றங்கள் இலகுவாக திட்டமிடப்பட்டு நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களில் அரங்கேற்றப்படுகின்றன.இவை காவல்துறையினர்,அதிகார பசி கொண்ட சில அரசுசார்பு அரசியல்வாதிகள்,காசுக்கு அலையும் சில சட்டதரணிகள் தயவில்லாமல் நடப்பதற்கான வாய்ப்பு மிககுறைவு,எனவே இக்குற்றவாளிகள் நாளை உங்களையோ உங்கள் வீட்டில் உள்ளவர்களையோ பதம் பார்க்க முதலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுங்கள்,இவற்றை ஊக்குவிக்கும் மேற்படி அரசியல்வாதிகள்,காவல்துறை சட்டதரணிகள் இவர்கள் இதற்கு தீர்வு காணபோவதில்லை,ஏனெனில் இதுதான் அவர்களின் வருமான அரசியலில் பெரிய மூலதனம்,எனவே மக்கள் அந்தந்த கிராமங்கள் இடங்களில் விழிப்பு குழுக்களை அமைத்து உங்கள் இடங்களையும் மக்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.விழிப்பு குழுக்கள் மூலம் மேலும் பல நடவடிக்கைகளை தங்கள் தங்கள் சமூகம் சார்ந்து நீங்கள் செய்து கொள்ள கூடிய வழிமுறைகள் உள்ளன.இவற்றின் மூலம் தமிழ் இனத்தை நாம் மீண்டும் கட்டியெழுப்பி கொள்ளமுடியும்.