இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(இஸ்ரோ) தலைவரான சிவன் மற்றும், பிரான்சின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தின் (சி.என்.இ.எஸ்) தலைவரான ஜீன்-யவ்ஸ் லு கால் ஆகியோருகிடையே இந்த வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற சந்திப்பில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இந்த திட்டத்துடன் கடல்சார் கள விழிப்புணர்வு, த்ரிஷ்ணா, ஓசியான்சாட் -3 ஆர்கோஸ் போன்ற திட்டங்களுக்கான கூட்டு செயல்பாடுகள் குறித்தும் இரு தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
இஸ்ரோ சந்திரயான், மங்கல்யான் போன்ற திட்டத்தினைத் தொடர்ந்து, வெள்ளி கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்புவதில் கவனம் செலுத்தி வருகிறது.
2025-ஆம் ஆண்டு வெள்ளி கிரகத்திற்கு விண்கலன் அனுப்பும் திட்டத்தில் பிரான்சின் தேசிய விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து செயல்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.