இந்த உலகம் யாருக்கானது..?

186

இந்த உலகம் யாருக்கானது?

சரியாக பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.

தோன்றிய நாள் முதல் தன் கட்டுப்பாட்டில் இந்த உலகை வைத்திருப்பது யார்?

கடவுளா? கிடையாது.

மனிதனா? கிடையாது.

விலங்குகளோ, தாவரங்களோ கூடக் கிடையாது.

வேற்றுலக

மனிதர்களா? என்றால் அதுவும் கிடையாது.

ஆனால், அவை தான் ஆகசிறந்த உலக உயிர் உருவாக்கிகள். உயிரிகள் வாழ அடிப்படையும் அவைகளே. அவ்வுயிர்களை அழித்தொழிப்பதும் அவைகளே.

ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும் கடவுள் எனவும் அவற்றைக் கூறலாம்.

‘தனக்கு மட்டுமே உரியது இவ்வுலகம்’ என இறுமாப்பு கொண்ட அழிவுகாரணியான மனிதனும் இல்லை; விலங்குகளும் இல்லை. ஏன் தாவரங்களும் கூட இல்லை. இவை எதுவுமே இல்லை.

ஆனால், மேற்கூறிய எதுவும் இல்லாமல் இவைகள் மட்டும் வாழும் இந்த உலகம் அவைகளுக்கு மட்டுமே சொந்தம்.

கண்டறிந்து விட்டிர்களா யார்? என்று.

ஆம்.. அவை வேறு யாரும் இல்லை ‘நுண்ணுயிரிகள்’ தான்.

பூமியில் நிகழ்ந்த இரசாயன மாற்றங்களால் முதன்முதலில், ஒரு செல் உயிரிகளே உருவானதாக கோட்பாடுகள் நிரூபிக்கின்றன.

பலகோடி ஆண்டுகளாக அவைகள் மட்டுமே உலகில் தனித்து பல்கி பெருகி வாழ்ந்து வந்தன. அடுத்தடுத்து பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுதான் இன்றுள்ள மனிதன் வரை வந்துள்ளோம் .

தாவரங்கள் தங்கள் உணவை தானே உற்பத்தி செய்து கொள்ளும் என்ற கூற்றும் உண்டு. ஆனால், மண்ணில் நீக்கமற நிறைந்து உள்ள நுண்ணுயிரிகள் மண்ணில் விழும் இலை, தழை, உடல்களை உண்டு சிதைத்து சிதைத்து, பலகோடி ஆண்டுகளாக

மண்ணை, ஒரு உயிர் உற்பத்தி காரணியாக மாற்றி, அதிலேயே வாழ்ந்து வருகிறது. அத்தகைய நுண்ணுயிரிகளை மண்ணில் இருந்து அகற்றிவிட்டால், எந்த தாவரங்களும் வாழ முடியாது. தாவரங்கள் என்ற கண்ணி அகன்றாலே அனைத்து உயிர்களும் அழிந்து விடும். ஏனெனில், அவைதான் உணவுச் சங்கிலியில் பிரமான கண்ணி.

ஒரு மில்லி கிராம் நிறை கொண்ட காற்றில் பலகோடி கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன. ஒரு துளி கடல்நீரில் பல கோடி நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. கடல் வாழ் தாவர நுண்ணுயிரிகளே, உயிர் வளிகாற்றான ஆக்சிஜனை பெரும் பங்கு உற்பத்தி செய்கின்றன. பருவ காலநிலைகளை உருவாக்க கூடிய பெரும் செயலில், இவற்றின் பங்கு மிகமிக அளப்பறியது.

கிடைத்ததை எல்லாம் உண்டு சிதைக்கும்

அடங்காபசி கொண்ட இவைகளால் தான் உலகமே இயங்குகிறது. உண்டு சிதைக்கும் பணி இல்லை எனில் மனிதனுக்கு இட்லிகூட இல்லை, தயிர் இல்லை, மதுவகைகள் இல்லவே இல்லை. இறந்தால் கூட உடல் அப்படியே கிடக்கும், சிதையாது. நுண்ணியிர் செயல்பாடான நொதித்தலின் மூலமாகவே, பல உணவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதுபோலவே, உயிரினங்களின் உடலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இல்லை என்றாலே எந்த உயிரும் வாழவே முடியாது.

உயிர் கொல்லி மருந்து முதல், உயிர் காக்கும் மருந்து வரை இவைகள் இன்றி எதுவும் நடபெறாது.

இந்தநிலையில்தான், இயற்கையின் அதி அற்புத படைப்பில் மனிதன் கை வைத்தான். அவன் கண்டுபிடித்தது தான்

நுண்ணுயிரி அரசியல். அதன் விளைவுதான் கொரோனா.

கொரோனா என்ற நுண்ணுயிரியை

வைத்தே, மனித இயங்கியலை

பின்னோக்கி நகர்த்தி, அனைத்தும் இன்று முடக்கிவைப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

நுண்ணுயிர் அரசியலை எதிர்கொள்ளும்

திறனும், அதைநோக்கிய ஆய்வுகளிலும்

சிறந்த நல் ஆளுமைகள், தமிழினத்தில் உருவாகிட வேண்டும். இதை அலட்சியமாக கடக்க முற்பட்டால் அடிமைகளாக தான் நம் இனம் வாழ நேரிடும்.

எந்த ஒரு எதார்த்த அரசியலும், புரட்சி அரசியலும் இந்த நுண்ணுயிர் அரசியலிடம் இனி எடுபடாது. நிகழ்காலமே அதற்கு சாட்சி.

உலகை கட்டியாளும் நுண்ணுயிர் அரசியலைக் கட்டி ஆள்பவனே.. இனி உலகை ஆள்வான்…

-சே. செயசீலன்

வள்ளுவப் பண்பாட்டு நடுவம்