வைரசுக்களை வைத்து வடை சுடுகிறதா மருத்துவ உலகம்?

100

மருத்துவம்னாலே பொதுவாக அறிகுறிகளை வைத்து செய்யப்படுவது தான்.

1918 ல வந்த இசுபானிய இன்ஃபுளுவென்சாவுக்கும் கோவிட்-19 க்கும் அறிகுறிகள் ஒன்று தான்.

வைரஸ் தான் வேற.

இசுபானிய இன்ஃபுளுவென்சா பற்றி பலரும் ஆங்காங்கே குறிப்பிட்டிருந்தாலும் இதுவரை நான் அதிக கவனம் செலுத்தவில்லை.

தொடக்க கட்டத்தில் சில ஆய்வாளர்கள் நூறு வருடங்களுக்கு ஒரு முறை இம்மாதிரி தொற்றுநோய்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று துல்லியமாக்கூறிக்கொண்டிருந்தனர்.

நோய்த்தொற்று தொடங்கிய காலகட்டத்தில் இந்தா போயிடும், அந்தா போயிடும் என்று சொல்லியே 7 மாதங்கள் போனதே தெரியவில்லை.

காயம் ஒரே மாதிரி. தாக்கிய கருவிகள் தான் வேறு.

வெறும் நுண்ணோக்கிகளை வைத்து வேறு வேறு என்று சொல்கிறார்கள். இது வேறு அது வேறு என்று.

ஃப்ளு வைரசுகள் பல கால சூழலுக்கேற்ப பெருக்கெடுக்கும்.

குறிப்பாக நோரோ வைரசு என்ற வைரசு , குளிர்கால வாந்தி நோய், என்னை நவம்பரில் தாக்கியது. அது என்னைத்தாக்கிய கதை சுவாரசியமானது. ஒரு 7 வயது பள்ளிச்சிறுமி வீட்டுக்கு வந்திருந்தாள். அவளுக்கு இந்த நோய் தாக்கி குணமடைந்த நிலையில் வந்திருந்தாள்.

அவளுடன் சிறிது விளையாடினேன்.

இரவு திடீரென்று வாந்தி வந்தது. வயிற்றில் இருந்த அனைத்தும் வெளியேறிய பின்னர் தான் அது விட்டது.

இந்த நோய் மிகச்சரியாக 48 மணிநேரத்துக்கு மேல் இருக்காது.

இவ்வளவுக்கும் அவள் குணமடைந்துவிட்டாள் என்று தான் அவள் அம்மா கூட்டி வந்தார்.

அப்போது இதுபற்றி எனக்கு அவ்வளவாகத்தெரியாததால் நான் அவள் தாயிடம் திரும்பத்திரும்ப கேட்க அவர் எரிச்சலடைந்துவிட்டார். நான் எதோ அவர்களை குற்றம் சாட்டுவதாக நினைத்து. நோய் பற்றிய உண்மையை அறிவதற்காகத்தான் இது பற்றிக்கேட்டேன்.

அதே போல நூறு வருட இடைவெளிக்கப்புறம் காலச்சூழல்கள் ஒத்திருப்பதால், இந்நோய் திரும்ப வந்திருப்பதாக அறுதியிடலாம்.

வைரசுகள் வேறு அல்ல. அவை கால சூழலில் தங்கள் மரபணுக்களை மாற்றிக்கொள்கின்றன.

ஆக நுண்ணுயிரிகள் பற்றிய அறிவு என்பது வெறும் 0.0000001% தான். நுண்ணோக்கியில் பார்த்துக்கொண்டு வேறு வேறு பெயர் வைத்துக்கொண்டு எல்லாம் தெரிந்த மாதிரி பணக்கார மருத்துவ உலகம் ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.

உயிரின் சூட்சுமம் உனக்கு தெரிந்தால் உயிரை முற்றிலும் அழித்துவிடுவான் மனிதன். வாயிலேயே வடை சுடவேண்டியது தான்.

(பெரிதாக எழுதவேண்டும் என்று நினைக்கவில்லை. அது நீண்டுகொண்டே சென்றுவிட்டது)

Amala singh