வியப்பில் ஆழ்த்தும் அரிய தகவல்கள்

55

உலகில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் நம்பமுடியாத அதிசய நிகழ்வுகள் சில..

*நெப்டியூன் கோளில் நாம் ஓராண்டு வாழ முடிந்தால் பூமியில் 165 ஆண்டுகள் வாழ்வதற்குச் சமம்.

*இரையைத் துரத்தும் சிறுத்தை தரையில் கால்படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது.

*ஒரே இரவில் வௌவால் 3 ஆயிரம் பூச்சிகளைக்கூட தின்னும்.

*சராசரி குழந்தை வளரும் வேகத்தில் தொடர்ந்து ஒருவர் வளர்ந்துகொண்டே இருந்தால், 10 வயதில் 1,87,469 கிலோ எடையை எட்டி விடுவார். நல்லவேளை!

*செவ்வாயகிரகத்திலுள்ள மிகப்பெரிய எரிமலை 27 கிலோமீட்டர் உயரமானது. 84 ஈபிள் கோபுரங்களை ஒன்றன் மீது ஒன்றென அடுக்கி வைத்தது போல அத்தனை உயரம்!

*குதிரைகளால் ஒரே நாளில் 160 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.

*30 கோடி ஆண்டுகளுக்கு முன் 6 அடி நீளமுள்ள மரவட்டை பூச்சிகள் உலகில் சுற்றிக் கொண்டிருந்தன.

*உலகிலேயே மிகப்பெரிய பாறை ஆஸ்திரேலியாவில் உள்ளது. ‘உலுறு’ என்ற இப்பிரமாண்ட பாறை 114 மாடிக் கட்டிடத்தை விடவும் உயரமானது.

*பூமியின் ஒட்டுமொத்த மக்கள்தொகை எண்ணிக்கைக்குச் சமமான அளவு பூச்சிகள் பூமியின் ஒரு சதுர மைல் பரப்புக்கு உள்ளேயே இருக்கின்றன.

*பூமி முழுக்க 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கையை விட இன்று சீனாவில் வாழ்வோர் அதிகம்.

*பொதுவாக பிளிறக்கூடிய யானைகள் சில நேரங்களில் உறுமவும் செய்யும்.

*நமது உடலில் 96560 கிலோமீட்டர் நீளமுள்ள ரத்த நாளங்கள் உள்ளன.

*முதலையால் அதன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

*நாம் கனவு காணும்போது, உடலை நகர்த்த முடியாது.

*மண்புழுக்களுக்கு 5 இதயங்கள்!

*இன்றைக்கு மட்டுமல்ல…அன்றைக்கும் நீலத்திமிங்கலங்களே உலகில் மிகப் பெரிய உயிரினங்கள் டைனோசர்களை விடவும்!

*பூமியில் உள்ள ஒட்டுமொத்த மணல் துகள்களின் எண்ணிக்கையை விட பிரபஞ்சத்தில் அதிக நட்சத்திரங்கள் உள்ளன….!