வோட்டு போடுறதுக்கு ஒரு கதை உண்டு

84

Is voting compulsory?..

இந்த கேள்விக்கு பதில் எல்லாத்துக்கும் தெரிஞ்சதுதான்

இல்ல.. விருப்பம் உள்ளவங்க ஓட்டு போடலாம்..

ஆனா நா உங்களுக்கு ஒரு குட்டி விடயம் சொல்ல போறேன்…

இதே Voting compulsory னு சட்டம் போட்டாங்கனா என்ன ஆகும்??

ஆமா…உலகிலுள்ள 195 நாடுகள்ல 22 நாடுகள்ல voting compulsory. அதுல 11 நாடுகள்ல வோட்டு போடலேனா penalty கட்டனும்.

சிங்கப்பூர்ல ஒட்டுபதிவு இல்லைனா, நம்மோட voter id திரும்பப்பெறப்படும்.

.Peru, Greece போன்ற நாடுகளில் மக்களுக்கு அரசளிக்கும் சலுகைகள் நிறுத்தப்படும்..

இத விட highlight ஆ,

Brazil ல பாஸ்போர்ட் முட்க்கம் செய்யப்படும்..

Bolivia ல 3 மாசத்துக்கு salary கட் பன்னிருவாங்கலாம்…

ஒரு காலத்துல Switzerland, Spain, Italy, Venezuela போன்ற நாடுகள்ல compulsory voting இருந்துச்சு. இப்ப அத நீக்கிவிட்டாங்க.

இப்படி ஒரு மக்களாட்சிய compulsory அ தேர்ந்தெடுக்கிறதுல மக்களோட active participation வேணும்னு இவ்ளோ strict அ கடைபிடிக்கிற நாடுகளுக்கு மத்தியில…ரொம்பவே liberala vote பன்றது கூட people choice னு நம்ம country நமக்கு அவ்ளோ independent தருது…

சரி…ஒரு நல்லதுனு இருந்தா கெட்டதும் இருக்கும் இல்லையா….

அந்த வகையில நிறைய நாடுகள்ல வோட்டு போடுறதுக்கே நிறைய பாகுபாடு இருக்கு.

1893 ல இருந்து 1918 வரைக்கும் Prussia அப்படின்னு ஒரு country ல 3 class voting system வச்சாங்க…

அதுல ஒருத்தவங்களோட economic status அ வச்சு…அதிகம் பணம்வுள்ளங்க first class னும், ஏழைங்களெல்லாம் third class னும் வச்சு மக்களாட்சி க்கு நியாயமே இல்லாத பாகுபாடு நிகழ்ந்து வந்துச்சு…

1960 கள்ல Canada மற்றும் Australia ல மலைவாழ் மக்களுக்கு ஓட்டு மறுக்கப்பட்டுச்சு..

20 ஆம் நூற்றாண்டுல..Us, Chile, Colombia போன்ற நாடுகள்ல்ல படிச்சவங்க மட்டும் தான் ஒட்டு போடனும்னு சட்டமே கொண்டு வந்தாங்க…

Maldives ல Muslim vote கிடையாது…இந்தியால prisoner க்கு vote இல்ல. ( இப்போ மாத்திடாங்க)

இந்த மாதிரியான எவ்வித பாகுபாடுகளும் இந்தியாலயும் இலங்கையிலும் இல்ல.. ஆனா ஏன் எப்பயுமே வாக்கு சதவிகிதம் 80 ah தாண்டுறது இல்ல…

அதான் இங்க கேள்வி குறியே…அறியாமை தெரியாமை ஒரு சார இருப்பினும் அலட்சியமும் அக்கறையின்மையும் கூடி போச்சு.

பூத் க்கு போகம வேட்பாளர்கள் ஆட்சி க்கு வந்தோனே அவங்கள criticize பன்றது மட்டும் என்ன நியாயம்?

இப்படி நிறைய பேரு வோட்டு போடாம போறதினால தான் கள்ளவோட்டு ஒரு சாரம் அதிகமாகி தவறான தலைவர்கள் மேல வந்து நம்மை ஆட்சி செய்ய நேருகிறது. நாமலும் வழக்கம் போல அடுத்த 5 வருடம் திட்டிட்டு மக்களாட்சிய சரி இல்ல.. எவன் ஒழுங்குனு மறுபடியும் ஓட்டு போட போகாம ஒரு தவறான தலைவரை நாமே மறைமுகமாக தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறோம்.


மணி ரத்னம் படத்துல சொல்ற மாறி சாக்கடை சாக்கடை னு ஒதுங்கி ஓடாம இறங்கி சுத்தம் செஞ்சாதான் கூவமும் தேம்ஸ் நதியாகும்..

அதே போல் தான் அரசியலும், அதற்கான மக்களின் பங்களிப்பும்..

Vote போடுங்க!

நன்றி🙏