சிறிலங்காவுக்கு திரும்பும் புலம்பெயர் தமிழர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் – போர்குற்றவாளி சவேந்திர சில்வா கர்சிப்பு

81

தமிழர் தேசத்தைப் பறித்து ஆக்கிரமித்து தமிழின அழிப்புகளைக் கட்டவிழ்த்து இற்றைவரை தமிழர் நிலங்களை தொடர்ச்சியாக அபகரித்து இராணுவ ஆக்கிரமிப்புக்களால் எம் தமிழர் வாழ்வைச் சிதைக்கும் வந்தேறு குடி இரத்தக் காட்டேரிகள் சொல்கின்றன:

“புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தம் தாய் நாடாம் ஈழத் திரு நாட்டிற்கு வர முடியாது!” என்று!

“புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்குள் நுழைய முடியாது!” என
போர்குற்றவாளி, இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா கூறுகிறான். அவன் மேலும் கூறுகையில்

“கொரோனா வைரஸ் பரவலை சிங்கள அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலைமைகளுக்கு மத்தியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டுக்குள் நுழைய முடியாது!

தற்போது சமூகத்துக்குள் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்படவில்லை!

கடற்படையினர், தனிமைப்படுத்தப்படுத்தல் முகாம்களுக்குள் உள்ளவர்கள் மாத்திரமே தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்!

அக்குரணை, புத்தளம், உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்த தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், தற்போது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்!

இவ்வாறு 6,340 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்

மேலும், 37 தனிமைபடுத்தல் முகாம்கள் தற்போதும் உள்ளன.

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களும் கடற்படையினருமே அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிருந்து வருவோர் தொடர்பாக விஷேட அவதானம் செலுத்தப்படும்!

அதனால், நாட்டுக்கு எதிரான குற்றங்களை செய்தவர்கள் நாட்டுக்குள் நுழைந்தால் அவர்களை அடையாளம் காண முடியும்!

புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விமான நிலையப் பணிகளில் பணியாற்றுகின்றனர்”

எனக் கூறினார்.

மொத்த கொரணாவும் சிறிலங்கா படையினர் மத்தியில் குத்தகைக்கு வாங்கிக் கூத்தாடுகையில்
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கொரணாவைக் கொண்டு வருவர் நாட்டிற்கு எனக் கூறி தடை போடுவது வேடிக்கையானதும் சினமூட்டுவதுமாகும்!

முதலில் இனப்படுகொலை வெறிப்படையை கொரொணாத் தொற்று அறியப்படாத எம் தமிழர் நிலங்களிலிருந்து விரட்டு!
கொரொணா தானாக அடங்கும்!

கொரணாவை விடக் கொடியது இனப்படுகொலையாளிகளான சிங்கள கொலைகாரப்படை.

முதலில் எம் மக்களை எம் நிலத்தை அந்த காடையரிடமிருந்து உலகம் காப்பாற்ற வேண்டும்!