
2011 இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் இறுதி போட்டியில் சூதாட்டம் நடைபெற்றிருப்பதாக தெரிவித்த சிறிலங்கா அரசின் விளையாட்டுதுறை அமைச்சு,சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்ககாரவிடம் எட்டு மணி நேர விசாரணை நடத்தியுள்ளதுடன்,துணை கேப்டன் மஹேல ஜெயவர்த்தனவிடம் விசாரணைக்கு கோரியுள்ளது.
இறுதி போட்டியில் முதலில் ஆடிய சிறிலங்கா அணி நல்ல ஓட்டங்களை பெற்றிருந்தும்,பந்துவீச்சு,களதடுப்பில் இடம்பெற்ற குளறுபடிகளினால் தோல்வியடைந்துள்ளதாக கருதும் சிறிலங்கா அரசு இது தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.இதே வேளை போட்டியை நேரில் பார்க்க சென்ற அன்றைய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மஹிந்த,120 கோடி இந்திய மக்களுக்காக 2 கோடி சிறிலங்கா மக்கள்,உலக கோப்பையை விட்டு கொடுத்ததாக கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.
இரு அணிகளில் ஒரு அணி தொடர்பாக சூதாட்ட விசாரணை நடைபெறுகின்றதால்,மற்றைய அணியான இந்திய அணி,உலக கோப்பையை விளையாடி வெற்றி பெறாமல்,சூதாட்டம் மூலமாகதான் வென்றதா என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாமல் இல்லை.இதே வேளை இந்தியணி தலைவர் தோணி ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி சூதாட்டத்தில் ஈடுப்பட்டத்தாக இரு வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.தவிர இந்திய கிரிக்கெட் சபை தனியார் நிறுவனம் என்பதாலும் இந்திய கிரிக்கெட் உலக கோப்பை வெற்றியின் பின்னால் பல்லாயிரம் கோடி வர்த்தகம் உள்ளமையினால்,இங்கு எதுவும் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளமை குறிப்பிடதக்கது.வெற்றி விலை கொடுத்து வாங்ககப்பட்டிருக்கலாம்.