உடைகிறதா அமெரிக்கா?

85

அமெரிக்கா இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றது, முதல் பிரிவு கறுப்பின மக்களும் அவர்களுக்கு ஆதரவான வெள்ளை இனத்து மக்களும், கலப்பின மக்களும்

இரண்டாவது பிரிவு குரோஷியா கால்பந்து அணி போல தூய இனவாத வெள்ளை மேலாதிக்க மனம் கொண்ட பிரிவு

இந்த தூய இனவெறி கும்பல் சற்று தணிந்திருந்த நிலமையினை பற்றி எரிய வைக்கின்றது, “கறுப்பர்கள் அமெரிக்கர்கள் அல்ல, அமெரிக்கா பிரிட்டன் வழிவந்த ஒரிஜினல் வெள்ளையருக்கே” என உரக்க சொல்ல தொடங்கிவிட்டார்கள்

கறுப்பர்கள் லிங்கன், மார்ட்டின் லுத்தர்கிங், சமீபத்தில் கொல்லபட்ட ஜார்ஜ் பிளாய்ட் படங்களுடன் ஊர்வலம் வரும்பொழுது, வெள்ளையர்கள் யார் படத்துடன் ஊர்வலம் வருகின்றார்கள் தெரியுமா?

டொனால்ட் ட்ரம்ப் படத்தோடு

இதில் வெளிநாட்டு தொடர்பு, அந்நிய நாட்டு தொடர்பு இருக்கலாமோ என சந்தேகம் அமெரிக்க அரசுக்கு வந்துவிட்டது, 1860களில் அமெரிக்கா இப்படி உடைந்து பெரும் கலவரம் வந்தபொழுது பிரிட்டனின் கரம் இருந்ததாக சந்தேகம் இருந்தது

1960களில் சோவியத் யூனியன் மார்ட்டின் லுத்தர்கிங்கினை இயக்குகின்றார் எனும் சந்தேகம் இருந்தது

யார் முயன்றாலும் நீரை எரிய வைக்க முடியுமா? பெட்ரோல் என்றால்தான் கொளுத்தினால் எரியும்

ஆம், இனவெறி என்பது அவர்கள் ரத்ததில் கலந்தது. அதை இன்னொரு சக்தி இயக்கித்தான் வரவேண்டும் என்பது அல்ல, எனினும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் காரியத்தை இன்னொரு சக்தி செய்யலாம்

இப்பொழுது அமெரிக்காவில் இரு கோஷ்டிகள் திரண்டாயிற்று, விவகாரம் பெரும் மோதலை நோக்கி செல்கின்றது. கலப்பினங்களும் கறுப்பர்களுக்கே ஆதரவளிக்கின்றனர்.

சரி இதில் இந்திய குடியேறி சமூகம் என்ன செய்கின்றது?

“யார் எப்படி போனால் என்ன?, வேலை இருக்கின்றதா? டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் சரிந்த்திருக்கின்றதா?, போதும்” என தட்டில் சோறோடு அமர்ந்துவிடுகின்றது

நன்றி Stanly Rajan