தமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி!

740

2010 இலிருந்து புலிகளின் பெயரை கொண்டே தமிழ் தேசியம் என்ற பெயரில் சிங்கள அரசுக்கு காலகெடுகளையும் முட்டுக்களையும் கொடுத்து தமிழர் வாழ்வாதாரத்தையும் நிலங்களையும் உரிமைகளையும் பறிகொடுத்த கூட்டமைப்பு கடந்த தேர்தலில் இருந்து சரிய தொடங்கியிருக்கின்றது.கூட்டமைப்பிலிருந்து 2010 களிலேயே பிரிந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி,பத்து வருடங்கள் கழித்து தமது அரசியலை மக்கள் ஆதரவுடன் சிறுது சிறிதாக பலப்படுத்தி முன்னேறிகொண்டுள்ளது.இடையில் வந்த விக்கி பின்னரான சுமந்திரன் உடனான அதிகார – அறிவு போட்டிகள் காரணமாக,பிரிந்து சென்று தனிகட்சி ஆரம்பித்து இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்! இந்திய,தமிழக தலைவர்களின் ஆசிகள் அதிகமாயுள்ளவரும்,ஆன்மீகவாதி என்ற அடையாளத்தை காட்டி அரசியல் முன்னெடுக்க முயலும் விக்கினேஸ்வரனின் அண்மைய கருத்துக்கள் உள்நோக்கம் கருதியவைகளாக இருக்க அதிக சந்தர்ப்பங்கள் உண்டு.

நாடாளுமன்றத்துக்கு சென்ற முதல் நாளில் இருந்தே அடுத்து அடுத்து அவசரமாக முள்ளிவாய்க்கால்,புலிகள் தமிழர்கள் என்றான சொற்பதங்களை அதிகமாக பாவித்து வரும் விக்கியர்,சூட்டோடு சூடாக வீழ்ந்து போன கூட்டமைப்பின் இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார் என்பது வெளிப்படை,கூட்டமைப்பின் ஆரம்ப கால நாடாளுமன்ற பயண பேச்சுக்களுக்கு சற்று குறைவில்லாத வகையில் ஆரம்பித்திருக்கும் விக்கியின் அடுத்தகட்ட அரசியல் எவ்வாறானதாக அமைய கூடும் என்பதை காலம் தமிழர்களுக்கு காட்டதான் போகின்றது! சிங்கள மக்கள் மத்தியில் விக்கிக்கு உள்ள பெருங்கோப தீயிற்கு எண்ணெய் விட்டு கொழுந்தெரிய செய்து, வட கிழக்கு தமிழர்களுக்கு தன்னை ஏக பிரதிநிதியாக காட்டி கொள்ள முயல்வதுடன்,வர போகின்ற வடமாகாணசபை முதல்வர் தேர்தலில் அவரது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இந்திய ஆதரவு நிலையுடன் ஒரு தனித்த சக்தியாக உருவெடுக்க பாக்கிறாரா என்று சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.

கூட்டமைப்பு கொள்கைகளுடன் கொள்கை முரண்பாட்டால் 2010ல் பிரிந்த முன்னணி,இம்முறை தேர்தல் களத்தில் கணிசமான வாக்குகளை பெற்று கூட்டமைப்புக்கு அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளதுடன்,அரச கட்சிகளின்,படையினரின் பல தடங்கல்கள் மத்தியில் இவற்றை சாதித்து காட்டியுள்ளனர்.ஆனால் விக்கினேஸ்வரன்,எழுச்சி காணும் முன்னணி,முதலிடத்தை பிடித்து விட கூடாது என்பதில் கவனம் செலுத்துவதோடு,இரு அரசியல்களுக்கும் இடையில் உள்ள இந்திய ஒவ்வாமையின் ஆதிக்கத்தை வட இலங்கையில் திணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிராந்திய வல்லரசுக்கு,துணை போக கூடிய அரசியலை முன்னெடுக்கும் நிலையில் விக்கினேஸ்வரன், சிங்கள தேசியவாதத்துக்கு எதிரான நிலையெடுப்பில் கவனம் செலுத்துகின்றமை கண்கூடு,ஆகவே புலிகள் முள்ளிவாய்கள் போன்ற வார்த்தைகளை முள்ளிவாய்க்கால் அரசியலை தமிழர்களுக்காக செய்யாமல்,சிங்கள தேசிய எதிர்ப்பு என்ற குறுகிய வட்டத்தினுள் கொழும்பினுள் இருந்து செய்ய போகின்றாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!