சரிய போகும் உலக பொருளாதாரம்… ஆபத்தில் மக்கள்

52

ஆம் எல்லாம் சொன்னபடிதான் நடக்கிறது இதை பெருமையாக எழுதவில்லை பெரும் வேதனையோடு எழுதுகிறோம்.

கச்சா எண்ணெய் விலை சரிவு, ரூபாய் மதிப்பு குறைவு, கொரோனா பாதிப்பால் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி என பணமலை படிப்படியாக சரிந்து கொண்டிருக்கிறது.

டீமானிசேசன் நடைமுறைப் படுத்தப்பட்ட போது அனைத்து காகிதங்களும் காசுகளும் டிஜிட்டல் ஆக்கப்பட்டது. எல்லோர் வீட்டில் இருந்த பணமும் உண்டியல் முதல் அஞ்சறைப்பெட்டி வரை இருந்த அனைத்து பணமும் வங்கியில் வலுக்கட்டாயமாக அரசால் பிடுங்கப்பட்டது. அந்த நேரத்தில் நாங்கள் கூறினோம். நாளை வங்கிகள் திவால் ஆனால் நமது பணம் மொத்தமும் போய்விடும். ஆகையினால் தயவுசெய்து பணம் மொத்தத்தையும் வங்கியில் வைக்காதீர்கள் என்று கூறினோம். எங்களைப் பார்த்து நகைத்தார்கள். பல வங்கிகளை பெரும் வங்கிகளொடு இணைத்த போது விரைவில் பல வங்கி திவாலாகும் என்று கூறினோம். அப்போதும் எங்கள் வாயை பொய் என்று கூறிய அடைத்தார்கள். இப்போது வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக மூட தொடங்கிவிட்டது. தயவு செய்து உங்கள் பணத்தை ஒரே வங்கியில் வைக்காதீர்கள்.

இதுவரை உலகில் நடந்த எந்த பொருளாதார வீழ்ச்சியிலும் இந்திய பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படவில்லை மேல்தட்டில் உள்ள ஒரு சதவீத உயர்தட்டு வர்க்கத்தை தவிர இங்கு யாரும் உலக பொருளாதார வீழ்ச்சியில் பாதிக்கப்படவில்லை. ஆனால் இப்போது வரவிருக்கும் பொருளாதார வீழ்ச்சி இந்திய பொதுமக்களை வெட்டி சாய்த்து விடும். அண்ணாச்சி கடைகள் இல்லை அம்பானி கடைகள் மட்டுமே இருக்கிறது அவைகள் காசு வரும் வரைதான் திறந்திருக்கும் இல்லாவிட்டால் மூடிவிடும். வீட்டில் அரிசியும், தோட்டத்தில் மாடு, காய்கறி பயிரிடுங்கள். குழந்தைகளுக்கு எளிமையாக கிடைக்கும் பொருட்களையே உணவாக பழக்குங்கள்.

அனைத்தும் அரசிடம் இருந்தபோது.. பொருளாதார வீழ்ச்சி காலத்தில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்ட தில்லை. ஆனால் இன்று தனியார்மயம் உள்ளது. சிறு பொருளாதார வீழ்ச்சி என்றாலும் நிறுவனங்கள் தனது பணங்களை பாதுகாக்க வேகவேகமாக இழுத்து மூடி விடும். மீண்டும் பொருளாதாரம் உயரும் போது அது மீண்டும் தொடங்கும். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுமக்கள் பணம் இல்லாமல் பெரும் வாழ்வியல் வீழ்ச்சியை அடைவார்கள். அகில் பணம் வைத்துக் கொள்ளுங்கள். பண்டமாற்று முறையை சிறிதாவது பயன்படுத்துங்கள்.

”உலக மறுவடிவமைப்பு முயற்சி” – இந்த நவீன உலகம் பல மாற்றங்களை மிகக் குறுகிய காலத்தில் செயல்படுத்த நினைக்கிறது. அதற்கு இந்த உலகம் தயாராகவில்லை. சில காலங்கள் எடுக்கும். ஆனால் வணிக அதிகார வர்க்கங்கள் அதற்காக காத்திருக்கப் போவதில்லை. இந்த உலகமே பற்றி எரிந்தாலும் அந்த வணிக வர்க்கம் அனைக்கப் போவதில்லை. எல்லாம் எரிந்து தரைமட்டமான பிறகு தாங்கள் நினைத்த மாதிரியான நவீன உலகத்தை மிக எளிதாகப் பெற்று விடலாம் என்று எண்ணுகிறது.

ஆம் இந்த உலகம் தன்னை நவீன படுத்திக்கொள்ள எண்ணற்ற உயிர்களை பலிகொடுக்க தயார் நிலையில்தான் இருக்கிறது.

கிரீஸ் நாட்டில் ரொட்டித் துண்டுக்காக ரோட்டில் ஓடிய நடுத்தட்டு மக்களும். வெனிசுலாவில் குழந்தை பாலுக்காக நடுரோட்டில் பிச்சை எடுத்த வேலை இழந்த பொறியாளர் பெண்மணியும் நமக்கு வரவிருக்கும் ஆபத்தை சொல்லி விட்டுத்தான் போகிறார்கள்.

எதையும் வெறும் செய்தியாக கடந்து கொண்டிருக்கிறோம். உணர்தலும் இவை நமக்கு வந்தால் நாம் என்ன செய்வது என்ற ஆயத்தமும் நமக்கு மிகவும் அவசியம்.

இனிவரும் சில மாத காலம் உலகை பொருளாதாரத்தில் உலுக்கப் போகிறது.

அச்சம் வேண்டாம் ஆயத்தமாய் இரு.

இவன்

Ingersol

தமிழறிவன் திரு ஐங்கர்சால்