கிளிநொச்சி பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்த சிங்கள பெண் விரிவுரையாளர் ஒருவர் இரவு காட்டுயானை தாக்கியதில் படுகாயமடைந்து,வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு வெளியில் நடமாடிய போது காட்டுயானை ஒன்று வளாகத்தில் வந்ததை அவதானித்து விட்டு ஓடிய போது,யானை அவரை தூக்கி எறிந்துள்ளது.படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மனிதர்கள் இயற்கை சமனிலை குழம்பி,மனித இனம் அத்துமீறும் போது,இவ்வாறானவற்றை எதிர்கொள்ளவேண்டிய தேவை மனிதர்களுக்கு இருப்பதுடன்,அவை இயற்கையை மீண்டும் சமனிலைப்படுத்துவதாகவே இருக்கவேண்டும்.இயற்கை எல்லோர் உயிரினங்களையும் அரவணைத்தே செல்கின்றது,மனிதர்கள் மட்டும் சூடு சொரறை இன்றி இயற்கையை அழித்து சமனிலையை குழப்புகிறார்கள்,இயற்கையுடன் மோதல் போக கை தவிர்த்து நண்பராக இருக்கும் போது இவற்றை தவிர்த்துகொள்ளலாம்.இவ்வாறான சம்பவங்கள் மனிதர்கள் எவ்வளவு தூரம் மனிதர்களை இயற்கையின்,தமது எதிரிகளாக பார்க்கின்றன என்று புரிகின்றது,ஆறறிவு என்று பெருமைப்படும் எம்மால் யானையை புரிந்து கொள்ளமுடியாமல் போனதுடன்,நம்மை அது எதிரியாக பார்க்குமளவுக்கு கொண்டுவந்துள்ளமை கவலைக்குரிய ஒன்று. மரணங்கள் தவிர்க்க முடியாதது,புலம்பல்கள் எமோசனல் சென்டிமென்டல்களை தவிர்த்து , இயற்கையை,மரணத்தை விளங்கி கொள்ளும் பக்குவத்தை வளர்த்து கொள்வதே மனிதகுலத்துக்கு தேவையான ஒன்று..இல்லையெனில் அழுதுகொண்டே பிறந்து அழுதுகொண்டே வாழ்ந்து அழுதுகொண்டே சாகும் அவல வாழ்க்கையை தாண்டி வாருங்கள்.