யாழ் குடாநாட்டு இராணுவ முற்றுகையும் கடும்பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கும் மத்தியிலும் தமிழ் மக்களின் அன்றாட செயற்பாடுகளை சீர் செய்ய தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர்கொண்ட தந்துரோபாய நடவடிக்கைகள்…!
விடுதலைப் போராட்டத்தை முடக்கி முடிவு காணத்துடித்த சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை நோக்காது கண்மூடித்தனமாக தனது ஆக்ரோச முகத்தை காட்டி வந்தது.ஆனால் விடுதலைப் போராட்டத்தை நம்பி புலிகளுக்கு ஆதரவு கொடுத்து வரும் மக்களை விடுதலைப் புலிகள் ஒருபோதும் கைவிட்டதில்லை.
சிங்கள அரசினால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை உடனடியாக உடைத்தெறிய செயற்பட்டவர்கள் தான் விடுதலைப் புலிகள். இதற்கு சான்றாக
1990ம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தவுடன்.யாழ்குடாவிற்க்கும் ஏனைய பகுதிகளுக்குமான தரைத்தொடர்புகளும் அனைத்தும் படையினரால் துண்டிக்கப்பட்டன.அதனைத்தொடர்ந்து விடுதலைப்புலிகளால் மக்கள் பாவனைக்கு கேரதீவு சங்குப்பிட்டிப் பாதை திறக்கப்பட்டு மக்கள் அப்பாதையூடாகப் ஏனைய மாவட்டங்களுக்கான போக்குவரத்துப் பணிகளில் ஈடுபட்டனர்.இதனையும் 1991ம் ஆண்டு இறுதிப்பகுதியில் அப்பாதையும் படையினரின் இரகசிய வன்வளைப்புமூலம் கைப்பற்றி அப்பாதையும் தடைப்பட்டது.இருந்தாலும் விடுதலைப்புலிகளால் கொம்படிப்பாதை திறக்கப்பட்டு அப்பாதையூடாகப் மக்கள் வெளிமாவட்டங்களுக்கான பயணங்களைத் தொடர்ந்தனர்.இதனையும் 1992ம் ஆண்டு நடுப்பகுதியில் பலவேகய 02
இராணுவ நடவடிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் வன்வளைத்தது.
தொடர்ந்து கிளாலிக் கடல்நீரேரியூடாகப் மக்கள் தமது பயணங்களைத் தொடர்ந்தனர்.
அதுவும் 1992ம் ஆண்டுபிற்பகுதியிலிருந்து பூநகரி நாகதேவன்துறையிலிருந்து கடற்படையினர் படகுகளில் வந்து மக்கள்மீது தாக்குதலைத் தொடுத்தனர். ஒருகட்டத்தில் மனிதகுலத்திற்கெதிரான மிகவும் மோசமான தாக்குதலை கடற்படையினர் நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள்மீது தொடுத்தனர். இதனைக் கவனத்திலெடுத்த தலைவர் அவர்கள் அவ்வேளையில் வளர்ந்து கொண்டிருந்த கடற்புலிகளிடம் அப்பொறுப்பை ஒப்படைத்து இப்போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்களைக் காப்பாற்றுமாறு பணித்ததுடன் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து கடற்புலிகள் தலைவர் அவர்களின் ஆலோசனைக்கேற்ப கிளாலிக் கடல்நீரேரியில் கடற்படையின் ரோந்துப்படகுகள்மீது ராடர் கண்காணிப்பின் மூலம் கடற்கண்ணிவெடிகளை வைத்து கடற்படையின் படகின் மீதிருந்த ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களையும் எடுத்திருந்தனர்.
அதன் பின் சிறியரகப்படகுகளில் கடற்புலிகள் மக்கள் போக்குவரத்திற்க்கு பாதுகாப்பு வழங்கினார்கள்.ஆனால் கடற்படையினர் நீரூந்துவிசைப்படகுகளையும் நவீனகனர ஆயதங்களையும் பயன்படுத்தியதால் தலைவர் அவர்களின் ஆலோசனைக்கேற்ப வேகமான படகுகள் தயாரிக்கப்பட்டு
வேகமாக கடற்படையின் படகுகளைக் கலைத்துச் சென்று தாக்கி மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள்.அதன் பின்னர் மக்கள் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில்
கடற்படையினர் அம்மக்கள் மீதுதாக்குதல் நடாத்த முற்பட்டவேளையில் கடற்கரும்புலிகளான மேஐர் வரதன்
அவர்களும் கப்டன் மதன் அவர்களும் கடற்படையின் கலங்கல்மீது தாக்குதல் நடாத்தி கிளாலிக் கடற்பரப்பில் காவியமானார்கள்( 26. 08.1993).இக்கரும்புலித்தாக்குதலின் பின்னர் கடற்படையின் மக்கள் மீதான தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டதுடன்.தொடர்ந்து
பூநகரி நாகதேவன்துறைக் கடற்படையின் மீதான வேவு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன.இவ்வெற்றிகரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடற்புலிகளின் முதலாவது கடற்தாக்குதல் தளபதியான லெப். கேணல். சாள்ஸ் அவர்களும் தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் தலைவர் அவர்களின் ஆலோசனைகளுக்கேற்ப எதிரியின் மாற்றங்களுக்கேற்ப உடனடியாக அப்போதிருந்த வழங்களைப்பயண்படுத்தி மக்கள் போக்குவரத்துப் பாதுகாப்புச் சமரை நடாத்தினார்கள்.இவ் மக்கள் பாதுகாப்புச் சமரில் 11.06.1993 அன்று லெப் கேணல் சாள்ஸ் அவர்கள் வீரச்சாவடைய தொடர்ந்து மேஐர் அழகன் அவர்கள் இவ் மக்கள் போக்குவரத்துப் பாதுகாப்புச் சமரை வழிநடாத்தினார்.அவரும் 29.06.1993 அன்று பாதுகாப்புச் சமரில் வீரச்சாவடைய இம் மாவீரர்களால் வளர்க்கப்படட போராளிகள் தொடர்ந்து அவர்களது பணியை செவ்வனவே செய்து முடித்தார்கள்.இவர்களது இவ் மக்கள் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணிகளின் போது எந்தவொரு மக்களும் கடற்படையால் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டார்கள்.அதுவும் தலைவர் அவர்களின் சொல்லுக்கு மதிப்பளித்து இப் பணிகளில் தங்களது உயிரைக் கொடுத்து மக்களைப் பாதுகாத்த மாவீரர்களை நினைவில் கொள்வோமாகா.இந்நடவடிக்கைகளை
கிளாலிக் கடற்கரையிலிருந்து சிறப்புத் தளபதி சூசை அவர்கள் செவ்வனவே வழிநாடத்தியிருந்தார்.
26.08.1993 அன்று கிளாலி நிரேரியூடாக போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைத் தாக்கவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை நடாத்தி கடற்படையின் இரு நீருந்து விசைப்படகுகளைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலிகள் இருவர் உட்பட ஐந்து போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
அவர்களின் விபரம் வருமாறு:
கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)
(கந்தசாமி இராமசந்திரன் – கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு)
கடற்கரும்புலி கப்டன் மதன்
(சீனிவாசகம் சிவகுமார் – மட்டக்களப்பு)
கடற்புலி கப்டன் சிவா
(முத்துலிங்கம் கருணாநாதன் – குச்சவெளி, திருகோணமலை)
கடற்புலி லெப்டினன்ட் பூபாலன்
(சுந்தரராஜ் பாஸ்கரன் – நாகர்கோவில், யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் சுரேந்திரன்
(சபாரத்தினம் சிவாகரன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.