இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதில் தமிழா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்-நிா்மலா சீதாராமன்

03-11-2023

0

22

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொட்டக்கலை பகுதியில் மவுன்ட் வொ்னன் தேயிலைத் தோட்டத்தின் கீழ் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினா்.

 

இந் நிகழ்வில் இந்திய நிதியமைச்சர் நிமலா சீதாராமன்  கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை கடுமையான பொருளாதார சரிவில் சிக்கியபோது, உதவிய முதல் நாடு இந்தியா தான்.  இந்நாட்டுக்கு உதவுவதை எங்களது கடமையாக கருதினோம்.  மேலும் சா்வதேச பண நிதியம் மூலம் பிற நாடுகளும் உதவுவதற்கு இந்தியாவே வழிவகுத்தது.

அண்மையில் நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.  யுபிஐ பணப் பரிவா்த்தனை தொடா்பான திட்டங்களும் விரைவில் தொடங்கப்பட உள்ளன.  இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதில் இங்கு வாழும் தமிழா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா் என்றாா் அவா்.