பாலஸ்தீன பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நாவிடம் கோரிக்கை

14-11-2023

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை இன்று  கையளித்துள்ளனர்.

 

இந்தக் கடிதத்தில் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவரிடம் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டதாகவும் இதன் இன்னொரு பிரதியொன்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

 

 உலகத் தலைவர்கள் இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினைக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து, இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

கடந்த ஒடோபர் 7ம் திகதி முதல் இது வரையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காசாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்  ஹமாஸ் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் குழந்தைகள் இறந்துள்ளனர். காசாவில் 4,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர்.