நரம்புமண்டலத்தை தாக்கும் நச்சு வாயுக்களை பயன்படுத்த திட்டம்

29-10-2023

காசாவின் கட்டமைப்புக்களை போன்ற மாதிரிகளை உருவாக்கி இஸ்ரேலிய படையினர் அமெரிக்காவின் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக த வோல் ஸ்ரீற் ஜேர்னல் தெரிவித்துள்ளது. அதனை அவர்கள் லிற்றில் காசா என அழைக்கின்றனர். நேகேவ் பாலைவனப்பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும், நரம்புமண்டலத்தை தாக்கும் நச்சு வாயுக்கள் அல்லது நீரை நிலத்தடி பதுங்கு குழிகளினுள் பாச்சுவதன் மூலம் ஹமாஸ் படையினரின் பதுங்குநிலைகளை அழிப்பது தொடர்பிலும் இஸ்ரேல் திட்டங்களை தீட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, தனது நாட்டில் இருந்து இஸ்ரேலிய தூதுவரை கொலம்பியா வெளியேற்றியுள்ளது. அதன் பின்னர் காசாவுக்கு உதவிப்பொருட்களை அது அனுப்பிவைத்துள்ளது.