சூழலியலாளரை பயங்கரவாதியாக அடையாளப்படுத்திய இஸ்ரேல்

27-10-2023

0

13

சூழலியலாளர் கிரேட்டா தன்பேர்க்கை பயங்கரவதத்திற்கு ஆதரவானவர் என இஸ்ரேல் அடையாளப்படுத்தியுள்ளது. அவர் காசா மக்களுக்கு ஆதரவளித்துள்ளதால் இஸ்ரேல் அரசு அவரை பயங்கரவாதியாக அடையாளப்படுத்தியுள்ளது.

 

அதே நேரம் ஜேர்மன் அரசு தனது படையினரை கிறீஸ் நோக்கி நகர்த்தி வருகின்றது. அங்கு ஏற்கனவே பிரித்தானியா மற்றும் அமெரிக்க படையினர் தரையிறங்கியுள்ளனர். முன்னர் மத்திய கிழக்கில் மோதல்கள் இடம்பெற்றபோது அமெரிக்க தலைமையிலான படையினர் இந்த தளத்தை தான் பயன்படுத்தியிருந்தனர்.

 

இதனிடையே, ஸ்பெயின் பிரதமர் மக்மூட் அப்பாஸை சந்தித்துள்ள அதேசமயம், ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் பிரதிநிதிகளுடன் தாங்கள் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

பலஸ்தீனம் பலமாக இருப்பதாகவும், இஸ்ரேலின் அரசியல் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் உடைந்துவிட்டதாகவும், தற்போது அதன் படைத்துறை மட்டுமே இயங்கிவருவதாகவும் அது பொதுமக்களுக்கு எதிராக இயங்கிவருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.