ஜேமன் அருகே அகதிகள் படகு விபத்து- 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்

15-11-2023

அகதிகள் படகு  ஒன்று ஜேமன் அருகே விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த படகு 75 பேருடன் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வளைகுடா நாடுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்நிலையில் வேகமாக காற்று வீசியதனால்  நிலைகுலைந்து அதிலிருந்தவா்கள் கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து 26 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 49 பேரும்  காணாமல் போயுள்ளதாகக் ஜேமன் கடலோரக் காவல்படையினா் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை காணாமல் போன யாரும்  இதுவரை   கண்டறியப்படாத நிலையில், விபத்தில் அவா்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆப்பிரிக்க நாட்டில் நிலவி வரும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் புலம் பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.