இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் களம்

02-05-2024

0

0

இந்திய நாடாளுமன்றம் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளைக்கொண்டது. அவற்றை லோக் சபா, ராஜ்ஜ சபா என வடமொழியில் அழைப்பார்கள். மக்களவைக்கான 542 உறுப்பினர்கள் பொதுத்தேர்தல் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்களின் வாக்களிப்பின் மூலம் தெரிந்தெடுக்கப்படுவார்கள். மாநிலங்களவைக்கான 250 உறுப்பினர்களில் 238 பேரை ஒவ்வொரு மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்வார்கள் எஞ்சி 12 பேரையும் குடியரசுத் தலைவர் நியமனம் செய்வார். இரண்டு அவைகளும் சட்டவாக்கல் அதிகாரம் கொண்டவை.

தலைமைத்துவம்

2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் விலைவாசி, வேலைவாய்ப்பு, அபிவிருத்தி, ஊழல் ஆகியவை முக்கிய பிரச்சனையாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. வலிமைக் மிக்க நரேந்திர மோடியைத் தலைமையைக் கொண்ட பாரதிய ஜனதாக் கட்சியும் (பாஜக) கட்சி அரசியல் திறன் இல்லாத ராகுல் காந்தியை முன்னிலைப் படுத்தி இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியும் போட்டியிடுகின்றன. வெற்றி நிச்சயம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இலட்சியம் என்ற கருத்துடன் பாஜக செயற்படுகின்றது. மூன்றாம் தடவையும் தோற்றால் தமது குடும்பமும் கட்சியும் இல்லாமல் போய்விடும் என நினைக்கின்றார் காங்கிரசுக் கட்சியை தன் கைக்குள் வைத்திருக்கும் சோனியா காந்தி.

அதிகார வெறியில் ஆடும் பாஜக

எதிர்க் கட்சிகளை உடைப்பது, எதிர்க் கட்சியில் இருந்து தமது கட்சியில் ஆட்களை இழுப்பது, தம் பக்கம் வராத எதிர்க் கட்சியினர் மேல் வழக்குத்த் தொடர்வது, சிறையில் அடைப்பது என பாஜக அதிகர வெறியில் ஆடுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. வருமானவரிக் கணக்கு பிந்தியமையை சாக்காக வைத்து காங்கிரசு கட்சியில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டும் இருந்தது. சரத் பவார் தலைமையிலான இந்திய தேசியவாதக் காங்கிரசுக் கட்சி, உதய் தக்ரே தலைமையிலான சிவசேனா ஆகியவை பிளவுபடுவதற்கு பாஜகவே காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அனைத்து இந்திய அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஓ பி பன்னீர்ச்செல்வம், ரிரிவி தினகரன் போன்றோரை பிரித்து தம்முடன் இணைந்து தேர்தலில் நிற்க வைத்துள்ளது பாஜக. புது டில்லியின் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலையும் ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனையும் பாஜக அரசு அவர்கள் தேர்தல் பரப்புரை செய்ய முடியாதவகையில் கைது செய்தது. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய செந்தில் பாலாஜியும் கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்ற பல நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் நடக்கின்றது. பாஜக நடவடிக்கை எடுக்கும் எதிர்க் கட்சி அரசியல்வாதிகள் யாரும் உத்தமர்கள் அல்லர். இந்தியாவே அயோக்கிய அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு நாடு.

பெரிய மாநிலங்கள்

இந்தியா மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களைக் கொண்டது. அந்த வகையில் 28 மாநிலங்களும் புதுச்சேரி போன்ற 8 ஒன்றியப் பிரதேசங்களும் இந்தியாவில் உள்ளன. உத்தரப் பிரதேசம் மிகப் பெரிய மாநிலமாகும். அங்கிருந்து 80 மக்களவை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எட்டு சிறிய மாநிலங்களில் இருந்து ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் தெரிவு செய்யப்படுவார். மொத்த 543 உறுப்பினர்களில் உதரப்பிரதேசம், மஹாராஸ்ட்ரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், பீஹார், கர்நாடகா, ராஜஸ்த்தான், குஜராத் ஆகிய ஒன்பது மாநிலங்களில் இருந்து 357 பேர் தெரிவு செய்யப்படுவார்கள். இந்த மாநிலங்களே தேர்தலை முடிவு செய்யும் மாநிலங்களாகும்.

முதலாளிகளின் பங்கு

பாஜக என்றால் கௌதம் அதானி, முக்கேஷ் அம்பானி ஆகிய இரண்டு பெருமுதலாளிகள் நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாது. இவர்களுக்கு பாஜக நாட்டை விற்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது. 2009-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும் போது உலகச் சந்தையில் எரிபொருள் விலை 120 டொலர்களாக இருந்தது. அதன் பின்னர் எரிபொருள் விலை பலதடவை இறங்கியது ஆனால் ஒரு போதும் நூறைத் தாண்டவில்லை. இந்த எரிபொருள் விலைக் குறைப்பு மக்களைச் சென்றடையாமல் முதலாளிகளுக்கே சென்றது என்ற குற்றச்சாட்டும் உண்டு. பாஜக ஆட்சியில் அதானியும் அம்பானியம் அதிக பயன் பெறுவதால் ஏமாற்றமடைந்த பல முதலாளிகள் சோனியா காந்தியின் காங்கிரசு கட்சிக்கு ஆதரவு வழங்குகின்றார்கள்.

தென் மாநிலங்கள்

தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசமும் 129 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. இவற்றில் முப்பதிற்கு குறைவான தொகுதிகளில் மட்டுமே பாஜக வெல்லும் என எதிர் பார்க்கப்படுகின்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனால் தமிழர்கள் அல்லர். அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் தேர்தல் பர்ப்புரையில் பெரிதாக ஈடுபவதில்லை. நோகாமல் நொங்கு தின்னும் பார்ப்பனர்கள் என இவர்கள் கிண்டல் செய்யப்படுகின்றார்கள். பாஜக மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வெற்றி பெற்றால் இந்தியாவையே மாற்றி விடுவார்கள், பாரதம் எனப் பெயர் மாற்றி இந்து நாடாக மாற்றுவார்கள், மற்ற மதத்தினருக்கு ஆபத்து என அச்சமடைபவர்கள் தென் மாநிலங்களில் பாஜக கடும் தோல்வியடையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.

இந்தி பேசும் மாநிலங்கள்

பிஹார், ஹரியானா, சத்ஸ்க்கார், ஹிமாச்சல் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்த்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இந்தி பேசும் மாநிலங்களில் ஹிமாச்சல் பிரதேசம் தவிர்ந்த ஏனையவற்றில் பாஜக வலுவாக இருக்கின்றது. உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி நகரில் இராமருக்கு கோவில் கட்டியமை பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் என பாஜக நம்புகின்றது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா (காந்தி) ஆகிய மூவரும் காங்கிரசில் இருக்கும் வரை பாஜகவை அசைக்க முடியாது.