மற்றுமொரு ஆய்வுக் கப்பலை அனுப்ப இலங்கையிடம் அனுமதி கோரும் சீனா

16-11-2023

0

24

இம்முறை சீனா Xiang Yang Hong 03  எனும்  மற்றுமொரு ஆய்வுக் கப்பலை இலங்கைக்கு அனுப்பவுள்ளது.  இந்த கப்பலை இலங்கை கடற்பரப்பின் சிறப்பு  பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது.

 

அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Xiang Yang Hong 03  கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமானது.

 

இதேவேளை, இந்தியாவின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த Shi Yan 6 கப்பல்   மீண்டும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தானியங்கி அடையாள கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், Shi Yan 6 மீண்டும் நாட்டிற்கு வருகை தருவது குறித்து அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

கடந்த சில வருடங்களில் 17-க்கும் மேற்பட்ட சீன உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்துள்ளன.