தொழிலாளர் வர்ககமும், அடிமட்ட மக்களும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே நாட்டிற்கு விடிவு
28-10-2023
0
24
இலங்கை ஜனநாயக சோசலிச மக்கள் குடியரசு என்பது அரசியல் கொலையாளிகளிடம், பொருளாதாரக் கொலையாளிகளிடம், யுத்த குற்றவாளிகளிடம் சிக்கி உள்ளது. இவர்களெல்லாம் தனித்தனி நபர்களோ, குழுக்களோஅல்ல. ஒரே நோக்கோடு பல்வேறு முகங்களோடு இயங்கும் ஒரே குழுக்களே.இவர்கள் சிங்கள பேரினவாதத்தையும்,சிங்கள பௌத்த மதவாதத்தையும் கவசமாக்கி தேசப்பற்றாளோர் முகத்தோடு இருப்பதால் மக்கள் இவர்களை அடையாளம் காண்பதில் தடுமாறுகின்றார்கள்.
அடையாளம் கண்டு அதற்கு எதிராக நிற்பவர்களை அடக்க பல்வேறு சட்டங்களை கொண்டு வருவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை என்பதனை பயங்கரவாத தடுப்புச் சட்டம்,நிகழ் நிலைகாப்பு சட்டம் கொண்டுவர துடிப்பதன் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். நாடாளுமன்றமும் ஒருவருக்கொருவர்தனியாகவும், கூட்டாகவும் கள்வர்கள், ஏமாற்றுக்காரர்கள், கொள்ளையர்கள், என கூறிக் கொண்டவர்களின் கைகளிலேசிக்கி உள்ளது.
இதற்கு மக்களும் காரணமாவர். இனவாதத்தையும், மதவாதத்தையும், சலுகைகளையும் தமக்கானபாதுகாப்பாக நினைத்து இவர்களை நாடாளுமன்ற கதிரைகளில் அமர்த்தி இருக்கின்றார்கள். இதுவே நாட்டுக்கானசாபக் கேடாக உள்ளது. மத்திய வங்கி சூரையாடப்படுதலுக்கு இடம் கொடுத்து நாடாளுமன்றில் கள்ளன் என பெயர்எடுத்தவரே நாட்டின் ஜனாதிபதியாகிவிட்டார்.இவர் இராணுவத்தின் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு காலிமுகத்திடல் போராட்டத்தை நசிக்கி போலி சாயம் பூசிய பொருளாதார பாதுகாப்பை வெளிப்படுத்தி மக்களின்எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருப்பவர்.
இவர் அண்மையில் ஜெர்மன் நாட்டு ஊடக பேட்டியொன்றில்" உயிர்ப்புஞாயிறு குண்டு வெடிப்பு உட்பட எதற்கும் சர்வதேச விசாரணை இல்லை"என குறிப்பிட்டதன் மூலம் சிங்கள பௌத்தமற்றும் அரசியல் பொருளாதார கொலையாலிகளினதும் யுத்த குற்றவாளிகளினதும் காவலன் என தம்மைஅடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தம்மை வேட்பாளராக பிரகனப்படுதியதோடுவெளிநாட்டு ஊடக சந்திப்பு ஒன்றைய தனது வாக்கு வேட்டை அரசியல் மேடையாக்கியுள்ளார். இலங்கை அரசுதமிழர்களை தொடர்ந்து இன அழிப்பு செய்து வருகின்றது.
மனிதம் ஏற்காத போரியல் குற்றங்களை புரிந்துள்ளது. படுகொலைகளை நிகழ்த்தி உள்ளது. இது தொடர்பிலான உள்நாட்டு விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணையே வேண்டும்.இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என கடந்த14 வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கையில்; சர்வதேச சக்திகளும் தமது அரசியலுக்காக அதனைசெவிமடுக்கவில்லை.
இதனை பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கோரிக்கைகளைநிறைவேற்றுவதாக சர்வதேச கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டு; மேற்கு உலக நாடோன்றின் ஊடக சந்திப்பில்"எந்த ஒரு விடயத்திற்கும் சர்வதேச விசாரணை இல்லை. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன்"என ரணில் கூறி இருப்பது தமிழ் மக்கள் மீது தொடர்ந்து இன அழிப்பு நடைபெறும் என்பதையும்இலங்கை அரசு எத்தகைய அரசியல் நீதிக்கும் ஆயத்தம் இல்லை என்பதை அபாய அறிவிப்பாகவே தமிழர்கள்கொள்ளல் வேண்டும்.
இதன் மூலம் ரணில் தான் சிங்களபௌத்த தேசப்பற்றாளன், யுத்த குற்றவாளிகளின் காவலன்,சிங்க மகன் என தம்மை அடையாளப்படுத்தி; சர்வதேச அரங்கில் தான் தமிழர்களின் அரசியலுக்கு எதிரானவன்என்பதையும் வெளிப்படுத்தி யுள்ளார். அதே சமயம் 2019 உயிர்ப்பு தின குண்டு வெடிப்பிற்கு சர்வதேச விசாரணைவேண்டும் என குரல் கொடுத்த கொழம்பு கத்தோலிக்க பேராயர் மால்கம் ரஞ்சித் "குற்றத்தை ஒப்புக் கொண்டால்மன்னிப்பு"என்றவர் தொடர்ந்து "வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால் சர்வதேச விசாரணை வேண்டாம்" என அறிவித்துள்ளார். வெளிப்படையான தூய்மையான விசாரணை நடத்தப்படாது என்பது தெரிந்திருந்தும் இவ்வாறுகூறுவது தமிழர்களும் சர்வதேச விசாரணையை கேட்டு விடுவார்கள். அவர்கள் கேட்பதும் நியாயமாகிவிடும். தான்தெற்கின் சிங்கள மக்களின் ஆயர் என்பதை நிரூபிக்க "சர்வதேச விசாரணை வேண்டாம்" என்று கூறுகின்றார்.இவர்எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இன அழிப்பு தொடர்பாகவும், யுத்தத்திற்கு எதிராகவும், இறுதி யுத்தத்தில் நடந்தபடுகொலைகள் காணாலாக்கப்பட்டமை போன்றவற்றிற்கு நீதி கேட்டது இல்லை. குரல் எழுப்பியதும் இல்லை. இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால "யுத்த இறுதி கட்டத்தில் நானே பாதுகாப்புக்குபொறுப்பாக இருந்தேன். உயிர்ப்பு தின குண்டு வெடிப்பிற்கு சர்வதேச விசாரணை கேட்டால் யுத்த குற்றங்கள் என்றும்சர்வதேச விசாரணை கேட்பார்கள். அதனால் உயிர்ப்பித்தின குண்டுத் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணைவேண்டாம்" என கூறியுள்ளார்.
தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை காக்க உயிர்ப்பு தின குண்டு வெடிப்பிற்குசர்வதேச விசாரணை வேண்டாம் எனக் கூறுவது குறுகிய அரியலாகும். இந்தப் பின்னணியில்.... 2002ல் ரணில்பிரதமராக இருந்த போது ஊடங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பெரும் அச்சிறுத்தலாக இருந்த குற்றவியல்அவதூறு சட்டத்தை நீக்கியதோடு; நல்லாட்சி காலத்தில் தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி காலத்தில் "மகிந்த ஆட்சி சமூக ஊடகங்களை முடக்க துடிக்கிறது.அதற்கு இடம்கொடுக்க மாட்டோம்.மக்களோடு சேர்ந்து போராடுவோம்" என மக்களை தூண்டியவர் அதுவும் அரசியலுக்காகவே தற்போது சமூக ஊடங்களை முடக்கி சிந்திக்கும்,எழுதும், வெளிப்படுத்தும், அறிந்து கொள்ளும் பகிரும் அடிப்படை உரிமைகளை பறிக்கும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவர அனுமதித்துள்ளதன்மூலம் அரசு வரும்பா எதனையும் பயங்கரவாத செயலாக்க அவசரப்படுவது ம் அரசியலே. தற்போது நாட்டில்பொருளாதார சுமுகநிலை தோன்றியுள்ளது போன்ற ஒரு மாயத்தோற்றம் நிலவுகின்றது. ஆனால் பொருட்களின்விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமாகவே உள்ளன. உணவுக்காக மட்டும் உழைத்தும் அதுவும்போதமையினால் ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் உண்ணும் மக்களும் உள்ளனர்.
உணவை சுருக்கி கொண்டதால்மக்களிடையே போஷாக்கின்மையும் அதிகரித்துள்ளது.தனி நபர் வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டில் ரூபா 6 லட்சமாகஇருக்க தற்போது அது ரூபா 16 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க முடியாது புலமையாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், வசதி படைத்த உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் மட்டுமல்ல சாதாரண உழைப்பாளர்களும் எனஆயிரகணக்கானோர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்க;இன்னும் பல ஆயிரம் பேர் நாட்டைவிட்டு வெளியேறஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.
பொருளாதாரத்தை சீர் செய்ய முடியாது நாடு தத்தளிக்கின்றது. சிங்களபேர் இன வாதிகளுக்கு மத்தியில் தாமே தேசப்பற்றாளன் அரசியல் மட்டும் பொருளாதார கொலையாளிகளின்துணைவன் என தம்மை வெளிப்படுத்தியும்; நாட்டின் உண்மை நிலை மக்களின் சென்றடைந்து இன்னும் ஒரு கிளர்ச்சிஏற்படக்கூடாது எனும் நோக்கத்தினால் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சட்டமாக்க இந்த அரசும் ரணிலும்துடிப்பதை உணரலாம். அத்தோடு கடந்த வருடம் நிகழ்ந்த காலிமுகத்திடல் போராட்டத்திற்கும்; வடகிழக்கில்தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களுக்கும் சமூக ஊடகங்கள் பெரும் பங்களிப்பு செய்து மக்களைஅறிவூட்டி, தெளிவூட்டி, திரளச் செய்கின்றது என்பதை நன்கறிந்து; அரசியல் சிந்தனையாளர்களை, அரசியல்செயற்பாட்டாளர்களை, போராட்டக்காரர்களை பயங்கரவாதியாக்கி சிறையில் அடைக்க நிகழ்நிலை காப்பு சட்டம்நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளது.
தொடர்ந்து பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக அதனையும் விடபயங்கரமானபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் வர உள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதம் ஏற்கனவே நாட்டைஅழிவு பாதைக்கு இட்டுச் சென்று இருளுக்குள் தள்ளி உள்ளது. தற்போது கொண்டுவரப்பட உள்ள சட்டங்கள் மேலும்மக்களை அழிவின் விளிம்பிற்கே இட்டு செல்லும். தொழிலாளர் வர்ககமும், அடிமட்ட மக்களும் ஒன்று சேர்ந்தால்மட்டுமே நாட்டிற்கு விடிவு உண்டு.
அருட்தந்தை மா.சத்திவேல்