உலகின் மிகவும் "சோகமான" யானை மரணம்

29-11-2023

0

42

உலகின் மிகவும் "சோகமான" யானை என பெயரிடப்பட்ட இலங்கை  யானை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள மிருக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ளது. குறித்த யானை மணிலா மிருக்காட்சாலையில் இருந்த ஒரே ஒரு யானை என்பதால் தனது வாழ்நாளை தனிமையில் வாழ்ந்துள்ளது.

 

விஸ்வ மலி என பெரியடப்பட்ட குறித்த யானை பிறந்து 11 மாதங்களில்  1977 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸின் முதல் பெண்மணி இமெல்டா மார்கோஸுக்கு இலங்கை அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மே மாதம் யானை மணிலா நகரத்தின் பராமரிப்பின் கீழ் வந்தது. இதேவளை, 1977 ஆம் ஆண்டு ஷிவா என்ற மற்றொரு யானையும் மிருக்காட்சாலையில் இருந்தது. அந்த யானை 1990 ஆம் ஆண்டு உயிரிழந்தது.

 

அன்றிலிருந்து மலி மிருகக்காட்சிசாலையில் இருந்த  ஒரே யானையாக தனிமையில் வாழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், பிலிப்பைன்ஸிற்கான ஒரு விஜயத்தின் போது நாட்டிற்கு மலியை கொண்டுவந்த அதே இலங்கை அரசாங்கமே புதிய யானையை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக மணிலா மேயர் ஹனி லகுனா பிலிப்பினோவில்  இன்று  ஊடகவியலாளர் சந்திப்பில்  தெரிவித்துள்ளார்.