கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த தெலுங்கு நடிகை
17-11-2023
0
22
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதபாத் மைனாத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் மோதுகின்றனர். இந்த முறை நாம்தான் கப்பை வெல்வோம் என்ற நம்பிக்கை இரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்த நேரத்தில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் தான் நிர்வாணமாக ஓடுகிறேன் என தெரிவித்துள்ளார். அவருடைய இந்தக்கருத்து இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும், இந்தியா இறுதி போட்டியில் வென்று உலக கோப்பையை வென்றால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்குமா? என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவை பார்த்த பலர் ரேகா போஜ் தனது சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கிறார்கள். ஆனால் ரேகா போஜ் இதையெல்லாம் நான் இந்திய கிரிக்கெட் அணி மீது உள்ள அன்பின் காரணமாக செய்கிறேன். நான் பரபரப்புக்காக செய்யவில்லை என்று கூறியுள்ளார். உண்மையில் என்ன நடக்கபோகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மாங்கல்யம், டாமினி வில்லா, காலாயா தாஸ்மை நாமா, காட்சயாமி, சுவாதி சினுகு. ரங்கீலா உள்ளிட்ட படங்களில் ரேகா போஜ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.