தேர்தல்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றோம்- பசில் ராஜபக்ச

01-11-2023

தேர்தலைப் பிற்போட்டு அதில் அரசியல் நடத்த எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

 இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதன் பிரகாரம் அதிபர்த் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் அடுத்த வருடம் நடைபெற வேண்டும். இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம். சிறிலங்கா பொதுஜன பெரமுன தேர்தல்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது. தேர்தல்களுக்கு அஞ்சும் கட்சி எமது கட்சி அல்ல என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.