'எங்கும் தண்ணீர் தண்ணீர் என்ற குரல்களே ஒலிக்கின்றன'-Thomas White
12-11-2023

காசாவில் உள்ள மக்கள் இரண்டு அரபு ரொட்டிகளையே தினமும் உணவாக உட்கொள்கின்றனர். அங்கு மிஞ்சியிருக்கும் மாவில் அதனை தான் அவர்களால் உண்ணமுடியும் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியான Thomas White தெரிவித்துள்ளார்.
193 நாடுகளை கொண்ட ஐ.நா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற காணொளி மூலமான சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,'இப்போது ரெட்டிகளை விட தண்ணீரே மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது எங்கும் தண்ணீர் தண்ணீர் என்ற குரல்களே ஒலிக்கின்றன. அந்த பகுதிக்கு ஒரு தண்ணீர் குழாய் மூலமே நீர் விநியோகம் நடைபெறுகின்றது. 1.7 மில்லியன் மக்களுக்கு உணவுகளை தயாரிப்பதற்கு 86 பேக்கறிகளே இயங்குகின்றன என்றார்.
அதேசமயம், இஸ்ரேலில் இடம்பெறும் ஒரு மாத போரில் உக்ரைனில் இடம்பெறும் 620 நாள் போரைவிட அதிகளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காசாவில் இடம்பெறும் போரில் இதுவரையில் 10.328 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,237 சிறுவர்கள் மற்றும் 2,719 பெண்கள் ஆவார். மேலும் 26000 பேர் காயமடைந்துள்ளதுடன், 2300 பேர் காணாமல்போயுள்ளனர்.