விஜயின் லியோ படம் குறித்து ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

17-10-2023

மகிழ்ச்சியில் இரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திறகான படப்பிடிப்பை கன்னியாகுமரியில் முடித்துவிட்டு, சென்னை செல்வதற்காகத்  தூத்துக்குடி விமான நிலையம் வந்த போது  நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையில்  என்ன  சொன்னார் தெரியுமா?

'இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்' என்றார்.

 ஆனால் விஜய் நடிக்கும் லியோ படத்தைச் சுற்றியெழும் சர்ச்சைகள் நின்றபாடில்லை.

முதலில் படத்தின் டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது சர்ச்சையானது, பிறகு அந்த டிரைலரை வெளியிட்ட திரையரங்கை பார்வையாளர்கள் சேதப்படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டது.

தற்போது, அதிகாலை நான்கு மணிக்குத் திரையிட அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.