மட்டக்களப்ப்பு: மாதவனை மற்றும் மயிலத்தமடு பகுதியில் தொடரும் நில அபகரிப்பு

22-11-2023

0

30

மட்டக்களப்பின் கிராமங்களான மாதவனை மற்றும் மயிலத்தமடு பகுதியில் சிங்கள மக்களின் ஆக்கிரமிப்புக்கு வழங்கப்படும் இலங்கை அரசின் ஆதரவுக்கு எதிராக  கால்நடை வளர்ப் போர் கடந்த இரண்டு மாதமாக போராடி வருகின்றனர்.

 

அம்பாறை மட்டக்களப்பு எல்லையில் உள்ள இந்த கிராமங்கள் 1972 ஆம் ஆண்டில் இருந்தே கால்நடைவளர்ப்பை தொழிலாகக் கொண்ட கிராமங்கள். 2009 ஆம் ஆண்டு ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னரே அங்கு சிங்களக் குடியேற்றங்கள் அதிகரித்தன. 

 

இந்தக் கிராமங்கள் 200,000 கால்நடைகளின் மேச்சல் நிலங்களை கொண்டது. அங்கு வாழும் 3,000 தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரமாக அவை.

 

2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் அங்கு 4000இற்கு மேற்பட்ட கால்நடைகள் சுட்டுக் கொல்லப்பட்டும் காணாமலும் போயுள்ளன, ஆனால் இதுவரையில் அதற்கு பொறுப்பானவர்கள் கைதுசெய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. அந்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தமிழ் பண்ணையாளர்களை அடித்து துரத்துவது, பயமுறுத்துவது, தாக்குதவது, அவர்களுக்கு செந்தமான வீடுகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்துவது, உடைமைகளை களவாடுவது, விவசாய உற்பத்திகளை கொழுத்துவது, வயல்களுக்கு தீயிடுவது, கால்நடைகளை பலவந்தமாக அபகரிப்பது போன்ற செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

 

இது தொடர்பில் பல போராட்டங்களை அம் மக்கள் நடத்திவிட்டனர். ஆனால் எந்த தீர்வும் இது வரையில் இல்லை. இருந்தும் தமக்கான தீர்வைப் பெற்றுத்தர வலியுற்த்தி அம் மக்கள் தொடர்ந்து போராடுகின்றனர்.