விசித்திரம்
15-11-2023
0
20
என்னது? கம்யூனிசம் என்கிற சித்தாந்தத்தைப் பெற்றெடுத்து அதுக்கு காது குத்தி கம்மல் போட்டு விட்டவங்க யூதர்களா? என்னங்க இது புதுக்கதையா இருக்கு?
'கம்யூனிசம் என்பது யூதர்கள் கண்டுபிடித்த ஒரு கோட்பாடு. யூதர்கள் அவர்களது வசதிக்காக அவர்களே உருவாக்கிக் கொண்ட ஒரு சூழ்ச்சித்திட்டம்தான் கம்யூனிசம். ஒரு கட்டத்தில் தேவையில்லை என்றபோது கம்யூனிசத்தை யூதர்கள் கைவிட்டு விட்டார்கள்’. இப்படி யாராவது நம்மிடம் வந்து சொன்னால் எப்படி இருக்கும்? ‘என்னங்க இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?’என்போம்.
நம்ப முடிகிறதோ இல்லையோ? இப்படி ஒரு கருத்துருவாக்கமும் உலகத்தில் இருக்கிறது. ஒருவேளை இது யூதர்களே கட்டமைத்த கதையாகக் கூட இருக்கலாம். ஆனால், இப்படி ஒரு கருத்தும் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத் தான் இந்தப் பதிவு. கம்யூனிஸ்டுகளின் பைபிள் என்று கருதப்படும் ‘டாஸ் கேப்பிடல்’ (மூலதனம்) என்ற புத்தகத்தை எழுதியவர் கார்ல் மார்க்ஸ். அவர் ஒரு யூதர் என்பது நமக்குத் தெரியும்.
மார்க்சின் நண்பர் பிரரெடரிக் ஏங்கெல்ஸ், அவர் ‘கம்யூனிஸ்ட் ராபி’ என்று அழைக்கப்பட்ட மோசஸ் ஹெஸ் என்பவரால் கம்யூனிஸ்ட்டாக திருமுழுக்காட்டு (ஞானஸ்நானம்) பெற்றவர் (யூத மதகுருக்களைத்தான் ராபி என்பார்கள்). ரஷியாவில், மன்னர் ஜார் நிகோலாய்க்கு ஒரு பாடம் கற்றுத்தரவேண்டும் என்ற ஆசை, ரஷியாவில் வாழ்ந்த யூதர்கள் நிறைய பேருக்கு இருந்திருக்கிறது.
ரஷியாவில் பொதுவுடைமை என்கிற போல்ஷிவிக் (கம்யூனிஸ்ட்) புரட்சி பூத்து 2 ஆண்டுகள் கழித்து, ரஷியாவில் இருந்த அமெரிக்க உளவுத்துறை அலுவலர்களில் ஒருவரான கேப்டன் மாண்ட்கோமரி ஸ்கைலர் என்பவர், 2 ரகசிய அறிக்கைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
1919 மார்ச், ஜூன் மாதங்களில் அந்த அறிக்கைகள் விளாடிவாஸ்டாக் நகரத்தில் இருந்து அனுப்பப்பட்ட அறிக்கைககள். அதில் ஓர் அறிக்கையின் சாராம்சம். ‘இங்கே கமிஸார்கள் என்கிற கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்புகளில் யூதர்கள் அதிக இடம் வகிக்கின்றனர். 384 கமிஸார்களில் 13 பேர் ரஷியர்கள், 15 பேர் சீனர்கள், 22 பேர் ஆர்மீனியர்கள், 300 பேர் யூதர்கள்(!) (இவர்களில் 264 பேர் ரஷியாவில் ஜார் மன்னர் வீழ்ந்தபிறகு அமெரிக்காவில் இருந்து விளாடிவாஸ்டாக்குக்கு வந்து சேர்ந்தவர்கள்).
ரஷியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த கால்டுவெல், 1918ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு அனுப்பிய ஒரு தந்தியில், ‘சோவியத் ரஷியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும், அரசு அமைப்புகளில் 50 சதவிகிதம் அங்கம் வகிப்பவர்கள் யூதர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.அப்போதைய ரஷிய போல்ஷிவிக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் 12 பேரில் 9 பேர் யூதர்கள். மக்கள் கமிஸார் குழுவின் 22 பேர்களில் 16 பேர் யூதர்கள். மத்தியக் குழு நிர்வாகிகள் 59 பேர்களில் 42 பேர் யூதர்கள்.
லியோன் டிராட்ஸ்க்கி, போல்ஷிவிக் கட்சியின் மத்தியக்குழு தலைவர் யாகோவ் ஸ்வெர்ட்லாவ் போன்றவர்களும் யூதர்கள்தான். ரஷிய புரட்சிக்குப்பிறகு மன்னர் ஜார் நிகோலாயை சுடச் சொல்லி, ரஷிய உளவுத்துறை காவலர் யூரோவ்ஸ்கிக்கு உத்தரவிட்டவர் இந்த யாகோவ் ஸ்வெர்ட்லாவ்தான்.
ரஷியாவில் பொதுவுடைமை தலைவர்களாக இருந்த யூதர்கள் பலர் தங்களது யூத அடையாளங்களை மறைத்துக் கொண்டு, ரஷியர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆப்ராம் ஷிடோவ்ஸ்க் என்ற வங்கியாளர் வழியாக ரஷிய பொதுவுடைமைப் புரட்சிக்கு, உலக அளவில் செல்வாக்கு மிகுந்த சில யூதர்களின் நிதியுதவி அந்தக் காலத்தில் கிடைத்திருக்கிறது. முதல் உலகப்போருக்குப்பிறகு ஐரோப்பாவில் 3 பொதுவுடைக் கிளர்ச்சிகளுக்கு அணியமாக இருந்தவர்களும் யூதர்கள்தான்.ஜெர்மனியின் பவேரியா பகுதியில் 1918 முதல் 1919 வரை ஒரு பொதுவுடைமை கிளர்ச்சிக்குத் தலைமையேற்ற குர்ட் ஈஸ்னர் ஒரு யூதர் (இந்த கிளர்ச்சி நடந்தபோது ஹிட்லர் ஒரு ராணுவ வீரராக இருந்தார்). ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்த ஒரு கிளர்ச்சியை நடத்தியவர் கார்ல் லிப்நெட் என்ற யூதர். ஹங்கேரியில் கிளர்ச்சியை நடத்திய பெலா கோகனும் கூட ஒரு யூதர்தான். ரஷிய போல்ஷிவிக் இயக்கம் யூதர்களுடையது அல்ல. ஆனால், அதன்மீது யூதர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்திருக்கிறது.
இஸ்ரேல் என்ற நாடு 1948ஆம் ஆண்டு உருவானபோது, அதற்கு முதலில் ஆதரவுக் கரம் நீட்டிய நாடுகளில் சோவியத் ரஷியாவும் ஒன்று. 1948ல் நடந்த முதல் அரபு - இஸ்ரேல் போரில், இஸ்ரேலுக்கு ஆயுத உதவி வழங்கியவர்களில் அப்போதைய ரஷிய அதிபர் ஜோசப் ஸ்டாலினும் ஒருவர்.
இஸ்ரேல் நாட்டின் கிபுட்ஸ் திட்டத்தை ஏதோ ரஷிய கூட்டுப்பண்ணைத் திட்டம் போல ஸ்டாலின் நம்பியிருக்கிறார். இஸ்ரேல் கம்யூனிச நாடாக மாறும் என்றுகூட ஸ்டாலின் கனவு கண்டிருக்கிறார். அது வெறும் கனவு என்பது தெரிந்தபிறகுதான் ரஷியா பாலஸ்தீனர்களுக்கும், அரபியர்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டத் தொடங்கியது. 1956ஆம் ஆண்டு ரஷிய அதிபர் நிகித்தா குருஷேவ், கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது கூட்டத்தில் ஆற்றிய உரையை இஸ்ரேல் உளவுப்பிரிவான மொசாத், ரகசியமாக உருவி அதை அமெரிக்க சி.ஐ.ஏ உளவுப்பிரிவிடம் ஒப்படைத்தது.கம்யூனிசத்தின் பின்னடைவுக்கும், சோவியத் ரஷியா உடைவதற்குமான விதை அப்போது தூவப்பட்டது. அதன்பிறகுதான் ரஷியாவுக்கும், சீனாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கம்யூனிச அகிலம் உடைந்தது. வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின.
ஐரோப்பாவில் போலந்து, ஹங்கேரி நாடுகளில் கம்யூனிசத்துக்கு எதிராக புரட்சிகள் நடந்தன. அதன்பின் ஒரு கட்டத்தில் சோவியத் ரஷியா துண்டு துண்டாக உடைந்து சிதறிப்போனது.யூத இனம் ஒரு விந்தையான இனம். தேவைப்பட்டபோது அது கம்யூனிசத்தை உருவாக்கி, தேவைப்படாதபோது அது கம்யூனிசத்தை வீழ்த்தி விட்டதாக சிலர் கருதுகிறார்கள். டாஸ் கேபிடலை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர்தான். இயேசு கிறிஸ்துவும் கூட ஒரு யூதர்தான்.ஆனால் யூதர்கள், இன்று வரை இயேசு கிறிஸ்துவையும் ஏற்கவில்லை, கார்ல் மார்க்ஸ்சையும் ஏற்கவில்லை என்பதுதான் இங்கே விசித்திரம்.
orupaper ISSUE -272