நடிக்கும் ஆர்வம் இல்லை - இயக்குநர் வெற்றிமாறன்

07-11-2023

0

22

இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

 

இயக்குநர் அமீர் நடித்துள்ள திரைப்படம் ‘மாயவலை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு  சென்னையில்  நடைபெற்றது.

 

இதில், கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், “நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி. இரண்டையும் ஒரு சிலரால்தான் சமாளிக்க முடியும். அது என்னிடம் இல்லை அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. 'வட சென்னை' ராஜன் கதாபாத்திரம் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது. கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன், கேரக்டர் குறித்து நான் சொல்லாமலே எனக்காக நடிக்கிறேன் என்றார். ஆனால் அதைப் பற்றி சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேனோ என்று நினைத்தார். ஆனாலும் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது” இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.

 

முன்னதாக இதே விழாவில் பேசிய இயக்குநர் அமீர், “வெற்றிமாறனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசை” என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.