மட்டக்களப்பு -வாகரை துயிலுமில்லம் மீது தாக்குதல்

25-11-2023

0

27

எதிர்வரும் மாவீரர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரை துயிலுமில்லத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் பிரதேச இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு மிக எழுச்சி பூர்வமாக துயிலுமில்லம் தயார்படுத்தப்பட்டிருந்த நிலையில்  இந்த துயிலுமில்லம் இனந்தெரியாத நபர்களால் தகர்க்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த நிகழ்வு தொடர்பான பதாதைகள் அகற்றப்பட்டு விசாரணை என்ற பெயரில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். 

 

2009ம் ஆண்டுக்குப் பின் அனைத்து துயிலும் இல்லங்களும் உடைத்து அழிக்கப்பட்டதோடு, பல துயிலும் இல்லங்களில் தற்போதும் ராணுவத்தினர் தமது முகாம்களை அமைத்துள்ளனர். ஒவ்வொரு மாவீரர் நாள் வரும் போதும் காவல்துறையினர் தடைகளை நீதிமன்றத்தின் ஊடக ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றமை தொடர்கின்றது. 

 

இந்த நிலையிலே நேற்று இரவு மட்டக்களப்பு வாகரை துயிலுமில்லம் நிழ்வுக்குத் தயார் செய்யப்பட்டிருந்த போது அது உடைக்கப்பட்டுள்ளது.

 

இந்த அச்சுறுத்தல்களையெல்லாம் கடந்து மக்கள் மாவீரர்களுக்கு  அஞ்சலி செலுத்த தயாராகி வருகின்றனர்.