தொடர்ந்து பறிபோகும் தமிழர்களின் நிலங்கள்

18-10-2023

தமிழ் அரரியல் கட்சிகள் என்ன செய்கின்றன?

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பகுதியில்  நில  அபகரிப்பு   தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் அரிசி மலை விகாரைக்கு அண்மித்த பகுதியில் பௌத்த மதகுரு ஒருவரினால் பூஜா பூமி என்ற அடிப்படையிலும் தொல் பொருள் என்ற போர்வையில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

அரிசிமலை விகாரையை அண்மித்த பல ஏக்கர் நிலங்கள் தனியார் மக்களுக்கு சொந்தமான விவசாய காணிகளாகும் இவர்களின் வாழ்வாதாரம் மீன் பிடி விவசாயம் சேனை பயிர்ச் செய்கை என  காணப்படுகிறது.

இது தொடர்பில் உரிய தரப்புக்கள் அம் மக்களுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத் தருவதில்லை எனவும் அங்கலாய்க்கின்றனர்.  தேர்தல் காலங்களில் வாக்கு கேட்பதற்காக வரும் அரசியல் தலைமைகள் அரசியல்வாதிகள் காணி பிரச்சினை என்றால் வருவதில்லை வெறுமென அறிக்கைகளை மாத்திரமே விடுகிறார்கள் செயலில் காட்டுவதில்லை தீர்வில்லாமல் வாழ்க்கை தொடர்கிறது என்பது அம்மக்களின் வேஜனையாக உள்ளது.

சிங்கள  மக்கள் யாருமே இல்லாத இடத்தில் பௌத்த விகாரை அமைக்கவும் சிலை வைக்கவும் முயற்சிக்கின்ற பௌத்த மதகுருக்கள் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது போன்ற காணி பிரச்சினை மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனாலும் எந்த தீர்வும் பாதிக்கப்படும் மக்களுக்கு எட்டப்படவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ இது குறித்து அதிக கவனம் செலுத்துவதுபோல் தெரியவில்லை.