மோதலில் ஈடுபட்டுள்ள  நாட்டுடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதா?

15-11-2023

0

17

இஸ்ரேலிற்கு தொழிலாளர்களை அனுப்ப இலங்கையில் எதிர்ப்பு

இஸ்ரேலிற்கு பத்தாயிரம் பண்ணை தொழிலாளர்களை அனுப்பும் முடிவை இலங்கை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என தேசிய காணி மற்றும் விவசாய சீர்திருத்தத்திற்கான அமைப்பான மொன்லார் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் யுத்தம்  நிறுத்தப்பட வேண்டும். அமைதி நீதி போன்றவற்றிற்கான வேண்டுகோள்களும் விடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள மொன்லார் அமைப்பு , மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோள்களும் அவசியம் என தெரிவித்துள்ளது.

 

இவ்வாறான பதட்டமான சூழ்நிலையில் இஸ்ரேலிற்கு இலங்கை பண்ணை தொழிலாளர்களை அனுப்புவதற்காக அறிவிப்பு  விடுக்கப்பட்டுள்ள. மேளும் ஆயுதமோதலில் ஈடுபட்டுள்ள நாட்டுடன் ஈடுபாடுகளை பேணுவது குறித்த ஒழுக்கநெறி தொடர்பான கேள்விகளை எழுப்புகின்றன என மொன்லார் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

நீதி மனித உரிமைகள் நலிவடைந்த நிலையில் உள்ள மக்களின் பாதுகாப்பு போன்ற கொள்கைகள் குறித்து மொன்லார் அமைப்பு உறுதியாக உள்ளது. இந்த மோதலின் போது பெரும் துன்பங்களை அனுபவிக்கும் பாலஸ்தீன மக்களிற்கு எங்கள் ஆதரவை வழங்குகின்றோம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

மோதல் இடம்பெறும் பகுதிக்கு தொழிலாளர்களை அனுப்புவது அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை  ஏற்படுத்தும் என்பதுடன் அதேவேளை மோதலில் ஈடுபட்டுள்ள  ஒரு நாட்டுடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த கேள்விகளையும் எழுப்புகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.